என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    செழியன் இயக்கத்தில் சந்தோஷ் ஸ்ரீராம் - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `டூலெட்' படத்தின் முன்னோட்டம். #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar
    ழ சினிமாஸ் சார்பில் சார்பில் பிரேமா செழியன் தயாரித்துள்ள படம் `டூலெட்'.

    சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலஷ்மி, தருண் பாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், இசை - தபஸ் நாயக், தயாரிப்பாளர் - பிரேமா செழியன், எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் - செழியன்.

    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருக்கிறோம் என்றார்.



    65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar

    கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `எல்கேஜி' படத்தின் முன்னோட்டம். #LKG #RJBalaji #PriyaAnand
    வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `எல்கேஜி'.

    ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - விது அய்யணா, படத்தொகுப்பு - அந்தோணி, கலை இயக்குனர் - டி.பாலசுப்ரமணியன், சண்டைப்பயிற்சி - சில்வா, பாடல்கள் - பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி சிங், திவ்யா நாகராஜன், தயாரிப்பு நிர்வாகம் - கே.எஸ்.மயில்வாகனம், ஒலி வடிவமைப்பாளர் - டி.உதயகுமார், தயாரிப்பாளர் - டாக்டர் ஐசரி கே.கணேஷ், எழுத்து - ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நண்பர்கள், இயக்கம் - கே.ஆர்.பிரபு



    படம் பற்றி பிரியா ஆனந்த் பேசும் போது,

    இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.

    பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் என்றார்.

    எல்கேஜி வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

    எல்கேஜி டிரைலர்:

    ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் முன்னோட்டம். #Dev #Karthi #RakulPreetSingh
    பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் `தேவ்'.

    கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, விக்னேஷ்காந்த், அமுதா ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு - ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன், ஸ்டண்ட் - அன்பறிவ், கலை இயக்குனர் - ராஜீவன், பாடல்கள் - தாமரை, விவேக், ரஜத், நடனம் - தினேஷ், ஷோபி, உடை வடிவமைப்பு - நீராஜா கோனா, நிர்வாக தயாரிப்பு - கே.வி.துரை, தயாரிப்பு - எஸ்.லக்‌ஷ்மன் குமார், எழுத்து, இயக்கம் - ரஜத் ரவிஷங்கர்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி பேசும்போது,

    இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். 

    தேவ் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

    தேவ் டிரைலர்:

    சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, எலிஸ்சா நடிப்பில் உருவாகி வரும் கூர்கா படத்தின் முன்னோட்டம். #Gurkha #YogiBabu
    தீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக யோகிபாபுவின் "கூர்கா" திரைப்படத்தை நிலையான வேகத்தில், சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.

    "இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. "கூர்கா" கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா, மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா, கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்" என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன்.

    காமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக வளரும் "கூர்கா", ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.

    சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து "4 மங்கீஸ்" ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க , கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
    சீயோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் - கருணாகரன் - அனு சித்தாரா, சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் முன்னோட்டம். #PodhuNalanKaruthi #Karunakaran
    ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.ஆர்.அன்புவேல்ராஜன் தயாரித்துள்ள படம் `பொது நலன் கருதி'.

    கருணாகரன், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, சுபிக்‌ஷா, லீசா, அருண்ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம், சுப்பிரமணியபுரம் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஹரிகணேஷ், படத்தொகுப்பு - கிரேசன், கலை இயக்குநர் - கோபிஆனந்த், சண்டைப்பயிற்சி - ஓம்பிரகாஷ், தயாரிப்பு - ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளர் - வி.ஆர்.அன்புவேல்ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சீயோன்.



    படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

    தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருப்பதாக கூறினார். 

    படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #PodhuNalanKaruthi #Karunakaran #SanthoshPrathap

    பொது நலன் கருதி டிரைலர்:

    ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முன்னோட்டம். #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தில்லுக்கு துட்டு 2'.

    சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷிர்தா சிவதாஸ் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், மாஸ்டர் சிவசங்கர், மாரிமுத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்பிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், பிரசாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஷபீர், ஒளிப்பதிவு - திப்பாக்குமார் பதி, பாடல்கள் - அருண்பாரதி & கானா வினோத், படத்தொகுப்பு - மாதவன், கலை இயக்கம் - ஏ.ஆர்.மோகன், சண்டைப்பயிற்சியாளர் - ஹரி தினேஸ், நடனம் - சாண்டி, ஆடை வடிவமைப்பு - ஆர்.பிரவீன்ராஜ், இணை தயாரிப்பு - சி.ரமேஷ்குமார், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், தயாரிப்பு - ஹாண்ட்மேட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் - என்.சந்தானம், எழுத்து, இயக்கம் - ராம்பாலா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது,

    ‘‘ பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், தில்லுக்கு துட்டு 2 படத்தில் மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.

    நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி. நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல. அந்த படங்களில் நான் நடித்து முடித்துவிட்டேன். ‘தில்லுக்கு துட்டு 2’ என் சொந்த படம் என்பதால், அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருகிறேன்.’’ இவ்வாறு சந்தானம் கூறினார். 

    படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    முருகேஷ் இயக்கத்தில் கிஷோர், சரண், பக்கோடா பாண்டி, பிரித்விராஜன், ரவி வெங்கட்ராமன், ஸ்ரீ ராம், ஆயிரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சகா’ படத்தின் முன்னோட்டம். #Sagaa #SagaaFrom1stFeb
    செல்லி சினிமாஸ் சார்பில் ஆர்.செல்வகுமார், ராம் பிரசாந்த் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சகா’. பல முன்னணி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதை களமாக கொண்ட படமாக “சகா” உருவாகி இருக்கிறது. கிஷோர், சரண், பக்கோடா பாண்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ரீ ராம், ஆயிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்திவிராஜன் முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார்.

    இசை & வரிகள் - ஷபிர், ஒளிப்பதிவு - நிரன் சந்தர், படத்தொகுப்பு - ஹரிஹரன், சண்டைப்பயிற்சி - கோட்டி, கலை ராஜூ, நடனம் - ஷெரிஃப் சதீஷ் சாண்டி, ஒலி வடிமைப்பாளர் - கீதா குரப்பா, தயாரிப்பு நிர்வாகம் - ஜெயக்குமார், தயாரிப்பு - ஆர்.செல்வகுமார் & ராம்பிரசாத், எழுத்து, இயக்கம் - முருகேஷ்



    படம் பற்றி இயக்குனர் முருகேஷ் கூறுகையில், “குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கிறார்கள். அவர்களுக்கு வரும் தடைகளையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் சகா திரைப்படத்தில் அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளோம்” என்றார்.

    படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Sagaa #Kishore #Saran #PakodaPandi #PrithviRajan #SreeRaam #Aayira #3DaysToGoForSagaa #SagaaFrom1stFeb

    சிவசக்தி இயக்கத்தில் வத்திக்குச்சி திலீபன் - அமலா ரோஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `குத்தூசி' படத்தின் முன்னோட்டம். #Kuthuoosi #Dhileban #AmalaRose
    ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டூடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம் `குத்தூசி'.

    வத்திக்குச்சி திலீபன் - அமலா ரோஸ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெயபாலன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - என்.கண்ணன், ஒளிப்பதிவு - பாகீ, படத்தொகுப்பு - ஜே.வி.மணிகண்டபாலாஜி, கலை இயக்குநர் - ஸ்ரீ ஜெய்கல்யாண், பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை, வசனம் - வீருசரண், சண்டைப்பயிற்சி - ராஜசேகர், நடனம் - சங்கர், ராதிகா, ஒவிக்கலவை - ஏ.எஸ்.லஷ்மி நாராயணன், சிறப்பு சப்தம் - சேது, ஆடை வடிவமைப்பு - ஏ.கதிரவன், தயாரிப்பு நிர்வாகம் - ஞா.ஏழுமலை, தயாரிப்பாளர் - எம்.தியாகராஜன், இணை தயாரிப்பு - கணேஷ் ராஜா.த, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் - சிவசக்தி.

    “ இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.



    படம் பற்றி இயக்குநர் பேசும்  போது,

    நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

    காதல், ஆக்‌ஷன், எமோ‌ஷன் என கமர்ஷியலாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் குத்தூசி உருவாகியுள்ளது” என்றார்.

    இந்த படம் நாளை (25.1.19) திரைக்கு வருகிறது. #Kuthuoosi #Dhileban #AmalaRose

    குத்தூசி டிரைலர்:

    அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் `சிம்பா' படத்தின் முன்னோட்டம். #Simba #Bharath #BhanuSriMehra #PremgiAmaran
    மேஜிக் சேர் பிலிம்ஸ் சார்பில் கே.சிவனேஸ்வரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சிம்பா'.

    பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், பவர்ஸ்டார் சீனிவாசன், சுவாமிநாதன், சுவாதி தீகித் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - சினு சித்தார்த், படத்தொகுப்பு - அச்சு விஜயன், கலை இயக்குநர் - வினோத் ராஜ்குமார் & அந்தோணி, சண்டைப்பயிற்சி - பில்லா ஜெகன், ஆடை வடிவமைப்பு - அசோக் குமார், தயாரிப்பாளர் - கே.சிவனேஸ்வரன், தயாரிப்பு நிறுவனம் - மேஜிக் சேர் பிலிம்ஸ், சினிரமா ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஸ்ரீதர்.



    படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சிம்பா டிரைலர்:

    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali
    ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேரன்பு’ .

    மம்முட்டி நாயகனாக அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், திருநங்கை அஞ்சலி அமீர், அருள்தாஸ், சுராஜ் வெஞ்சரமூட், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு - சூர்யா பிரதாமன், கலை இயக்குநர் - குமார் கங்கப்பன், பாடல்கள் - வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், தயாரிப்பாளர் - பி.எல்.தேனப்பன், இணை தயாரிப்பு - டி.சரஸ்வதி, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - ராம்.



    ‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

    “இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.” என்றார்.

    பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Peranbu #Ram #Mammootty #Anjali

    பேரன்பு டிரைலர்:

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் முன்னோட்டம். #VanthaRajavathaanVaruven #STR
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

    சிம்பு நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், நடனம் - பிருந்தா, சதீஷ்,  கலை இயக்குநர் - குருராஜ், தயாரிப்பாளர் - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், கதை - திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்:

    அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் முன்னோட்டம். #CharlieChaplin2
    அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2". இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

    முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - செளந்தர்ராஜன் / இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா, எடிட்டிங் - சசி / கலை - விஜய்முருகன் / நடனம் - ஜானி, ஸ்ரீதர், ஸ்டண்ட - கனல் கண்ணன் / தயாரிப்பு நிர்வாகம் - மகேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை - பரஞ்சோதி - திலீபன், இணை தயாரிப்பு - சந்திரசேகர், சரவணகுமார், தயாரிப்பு - டி.சிவா

    கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம். படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது, என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால் தான் படம் எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது. 16 வருடங்களுக்கு பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

    பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார். நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு டாக்டராகவும், அதா சர்மா மனோதத்துவ நிபுனராகவும் நடிக்கிறார்கள். இம்மாதம் 25ம் தேதி படம் வெளியாகிறது.
    ×