search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Rental house"

  • அப்பெண்ணிற்கு தரகர் ஒருவரும் அவர் நண்பரும் அறிமுகமானார்கள்
  • காலியாக இருந்த ஃப்ளாட்டிற்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர்

  புது டெல்லியின் வடக்கே உள்ளது புராரி பகுதி.

  இப்பகுதியில் சுமார் 30 வயதுடைய பெண் ஒருவர் குடியிருக்க வீடு தேடி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வீடுகளை வாங்கவும் விற்கவும் உதவும் ஜிதேந்திர சவுத்ரி எனும் தரகரும் அவரது நண்பர் ஒருவரும் அறிமுகமானார்கள். அப்பெண்ணிற்கு உதவ அவர்கள் இருவரும் முன்வந்தனர்.

  அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஃப்ளாட் ஒன்று வாடகைக்கு இருப்பதாக அவர்கள் இருவரும் கூறினர். இதனையடுத்து அவர்களுடன் அப்பெண் அந்த வீட்டை பார்க்க சென்றார்.

  காலியாக இருந்த அவர்கள் கூறிய அந்த ஃப்ளாட்டிற்கு அவர்கள் இருவரும் அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அப்பெண்ணுக்கு குடிக்க நீர் வழங்கினர். அதை குடித்ததும் அப்பெண் மயக்கமடைந்தார். அதன் பின், அவர்கள் இருவரும் அவரை பாலியல் ரீதியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

  நினைவு திரும்பியதும் தனக்கு நேர்ந்த விபரீதம் குறித்து அறிந்த அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

  உடனடியாக அருகிலிருந்த புராரி காவல்நிலையத்திற்கு சென்று, குடிநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தன் மீது கூட்டு பாலியல் தாக்குதல் நடத்தியதாக அந்த இருவர் மீதும் புகாரளித்தார்.

  கூட்டு பாலியல் வன்முறை வழக்கை பதிவு செய்த புராரி காவல்துறையினர், இது குறித்து மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  செழியன் இயக்கத்தில் சந்தோஷ் ஸ்ரீராம் - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `டூலெட்' படத்தின் முன்னோட்டம். #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar
  ழ சினிமாஸ் சார்பில் சார்பில் பிரேமா செழியன் தயாரித்துள்ள படம் `டூலெட்'.

  சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலஷ்மி, தருண் பாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், இசை - தபஸ் நாயக், தயாரிப்பாளர் - பிரேமா செழியன், எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் - செழியன்.

  படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

  நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருக்கிறோம் என்றார்.  65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar

  65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்ற ‘டூலெட்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று வரும் நிலையில், 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. #TOLET #Chezhiyan
  65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

  நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார்.  இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #TOLET #Chezhiyan

  ×