என் மலர்

  நீங்கள் தேடியது "Gurkha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கூர்கா’ பட டீசரை நடிகர் தனுஷ் வெளியிட இருக்கிறார். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
  சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். இப்படம் கோடை விருந்தாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, எலிஸ்சா நடிப்பில் உருவாகி வரும் கூர்கா படத்தின் முன்னோட்டம். #Gurkha #YogiBabu
  தீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக யோகிபாபுவின் "கூர்கா" திரைப்படத்தை நிலையான வேகத்தில், சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.

  "இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. "கூர்கா" கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா, மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா, கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்" என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன்.

  காமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக வளரும் "கூர்கா", ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.

  சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து "4 மங்கீஸ்" ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க , கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கூர்கா’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். #Gurkha #YogiBabu
  சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்த உள்ளனர். கோடை விருந்தாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.   சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து "4 மங்கீஸ்" ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #Gurkha #YogiBabu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் கனடா நாட்டின் மாடல் அழகி நடிக்கிறார். #YogiBabu
  அஜித், விஜய்யில் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி வரை முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருபவர் யோகி பாபு. ‘கூர்கா’ படம் மூலம் கதையின் நாயனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இருக்கிறார்.

  ‘டார்லிங்’, எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

  படத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் எலிசா முதன்மை வேடத்தில் நடிப்பதாக சாம் ஆன்டன் தெரிவித்திருக்கிறார். ‘இந்தக் கதாபாத்திரத்துக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.

  இவரது நடிப்புத் திறனைப் பார்த்து உடனடியாக இவரைத் தேர்ந்தெடுத்து விட்டோம். படத்தில் அமெரிக்க தூதராக நடிக்க இருக்கிறார். படத்தில் யோகி பாபுவுக்கும் எலிசாவுக்கும் இடையில் எந்தவித காதல் காட்சிகளும் இல்லை. ஆனால் படத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது’ என சாம் ஆன்டன் தெரிவித்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் கூர்காவாக நடிக்க இருக்கிறார். #YogiBabu
  யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாகத் திகழ்ந்து வருகிறார். விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்கள் இவர் கைவசம் உள்ளன.

  இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்றும் செய்தி வந்தது. ஆனால், அதில் யோகி பாபு ஹீரோ இல்லை. படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் என்று கூறியிருந்தார்.  தற்போது அந்த படத்திற்கு ‘கூர்கா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் கூர்கா வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் இவருடன் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. #YogiBabu
  ×