என் மலர்
சினிமா

யோகிபாபு பட டீசரை வெளியிடும் தனுஷ்
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கூர்கா’ பட டீசரை நடிகர் தனுஷ் வெளியிட இருக்கிறார். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். இப்படம் கோடை விருந்தாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
Next Story






