என் மலர்
முன்னோட்டம்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி. சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம் `மான்ஸ்டர்'.
எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - கோகுல் பினோய், இசை - ஐஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை இயக்கம் - சிவ சங்கர், இணை எழுத்து - சங்கர் தாஸ், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - சந்தோஷ், பாடல்கள் - யுகபாரதி, கார்த்திக் நேத்தா, சங்கர் தாஸ், தயாரிப்பு மேற்பார்வை - டி.நிர்மல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் - டி.பி.சசிகுமார், ஒலி வடிவமைப்பு - சின்க் சினிமாஸ், ஒலிக்கலவை - கண்ணன் கண்பத், ஆடை வடிவமைப்பு - பி.செல்வம், ஒப்பனை - ஏ.ஜி.மொய்தின், எழுத்து, இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,
குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.
சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.
`மான்ஸ்டர்' வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மான்ஸ்டர் டீசர்:
சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.
நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் பேசியதாவது,
“இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.
பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.
நட்புனா என்னானு தெரியுமா டிரைலர்:
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் முன்னோட்டம்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.லோக்கல்'.
சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஹரிஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - ஹப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் & ஆர்தர் ஏ.கிங், படத்தொகுப்பு - விவேக் ஹர்ஷன், கலை - சுப்ரமணிய சுரேஷ், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், நீராஜா கோனா, பி.செல்வம், சிகை அலங்காரம் - வினோத் சுகுமாரன், பாடல்கள் - கே.ஆர்.தரண், மிர்ச்சி விஜய், ரோகேஷ், நடனம் - தினேஷ்குமார், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - எம்.ராஜேஷ்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,
இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்திலேயே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைத்து கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது.
இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மென்மேலும் உயர்த்துகிறது என்றார்.
மிஸ்டர்.லோக்கல் டிரைலர்:
ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் ருத்ரா - நொஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அந்த நிமிடம்’ படத்தின் முன்னோட்டம்.
எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’.
இந்தப் படத்தில் சில தமிழ், மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இயக்கியவருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
ஒளிப்பதிவு - தங்கையா மாடசாமி, இசை - எஸ்.என்.அருணகிரி, பின்னணி இசை - சஜித் ஆண்டர்சன், எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ், சண்டைப்பயிற்சி - எஸ்.ஆர்.முருகன், நடனம் - ரேகா, கலை - செல்வராஜ், பாடல்கள் - அருண்பாரதி, தயாரிப்பு - ஆர்.குழந்தை ஏசு, மஞ்சுளா டி சில்வா, எழுத்து, இயக்கம் - ஆர்.குழந்தை ஏசு.

ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர். முதல்முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கி தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக நடிக்கும் ‘முந்திரிக்காடு’ படத்தின் முன்னோட்டம். #Munthirikaadu
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’.
இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “ ‘முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்கிறோம் என்றார். #Munthirikaadu
பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்க தானா நாயுடு நாயகியாக நடித்துள்ள "கைலா" படத்தின் முன்னோட்டம். #Kaila
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு "கைலா" என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். பாஸ்கர் சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர், ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பரணி செல்வம், இசை - ஸ்ரவன், படத்தொகுப்பு - அசோக் சார்லஸ், பாடல்கள் - வடிவரசு, கலை - மோகன மகேந்திரன், நடனம் - எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் - ஆர்.சுப்புராஜ், கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - பாஸ்கர் சீனுவாசன்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.
பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம் என்றார். #Kaila
விஜயன்.சி தயாரித்து இயக்க, விவேக் - ஷில்பா மஞ்சுநாத், சச்சு இணைந்து நடித்துள்ள `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் முன்னோட்டம். #PerazhagiISO #Vivek #ShilpaManjunath
கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள படம் `பேரழகி ஐ.எஸ்.ஓ'.
`நீ என்ன மாயம் செய்தாய்', `மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், `காளி' படத்தில் அறிமுகமாகி, `இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - இ.ஜே.நாசாத், இசை - சார்லஸ் தனா, படத்தொகுப்பு - இளவரசன், சண்டைக்காட்சிகள் - கிக்கேஸ் காளி, நிர்வாகத் தயாரிப்பு - நாகராஜன், இணை தயாரிப்பு - ஏ.எஸ்.அன்பு, வி.ரவிக்குமார், ஐ.அந்தோணி, தயாரிப்பு, இயக்கம் - விஜயன்.சி

படம் குறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது,
கதைப்படி எனது பாட்டி சச்சு, என்னைப் போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாக செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கதாபாத்திரம் வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும் என்றார்.
படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #PerazhagiISO #Vivek #ShilpaManjunath
பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் டிரைலர்:
எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் `நீயா 2' படத்தின் முன்னோட்டம். #Neeya2 #Jai
ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்துள்ள படம் ‘நீயா 2’.
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி இருக்கிறது. படத்தின் நாயகனாக ஜெய் இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடித்திருக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இசை - ஷபிர், ஒளிப்பதிவு - இராஜவேல் மோகன், படத்தொகுப்பு - சௌமி கிருஷ்ணன், கலை - ஐயப்பன், ஸ்டண்ட் - ஸ்டண்ட் ஜிஎன்,
நடனம் - கலா, விஜி, பாடல்கள் - கபிலன், பவன் மித்ரா, மோகன்ராஜ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - ஆக்சல் மீடியா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.சுரேஷ்.

இவர் “எத்தன்” படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,
இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமையும். அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது” என்றார். #Neeya2 #Jai #VaralakshmiSarathkumar #RaaiLakshmi #CatherineTresha
நீயா 2 டிரைலர்:
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தமிழரசு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `கே 13' படத்தின் முன்னோட்டம். #K13 #Arulnidhi #ShraddhaSrinath
எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர், சாந்த ப்ரியா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கே 13'.
அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் காயத்ரி, யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை - கமலநாதன், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - அசார், ஆடை வடிவமைப்பு - பிரியங்கா, பிருத்விராஜன் சந்தோஷ், நிர்வாக தயாரிப்பு - சிவக்குமார்.எம்.கே., இணை தயாரிப்பு - கிஷோர் சம்பத் & தீஷாஸ்ரீ, தயாரிப்பு - எஸ்.பி.ஷங்கர் & சாந்த ப்ரியா, எழுத்து, இயக்கம் - பரத் நீலகண்டன்.

படம் பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும் போது,
கே 13 என்பது கே பிளாக்கில் 13-ஆம் நம்பர் வீடு. ஆனால் அந்த வீட்டில் என்ன ஸ்பெஷல் என்பது தான் படத்தின் கதை. இது வெறும் அப்பார்ட்மண்ட் பெயர் அல்ல, கதாபாத்திரமாக பிரதிபலிக்கும். இந்த படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் ஒரு எழுத்தாளராக நடித்திருக்கிறேன். அருள்நிதி கதை உருவாக்குபவராக, படம் இயக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இது சாதாரணமாக நாம் பார்த்த திரில்லர் படம் போல் இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் டிரைலர் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக அனைவரையும் கவரும்படியாக, ரசிகர்களை யோசிக்க வைக்கும் விதமாக இருப்பது சிறப்பு என்றார்.
படம் வருகிற மே 3-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #K13 #Arulnidhi #ShraddhaSrinath
கே 13 படத்தின் டீசர்:
தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கத்தில் உமாபதி, யோகிபாபு நடிப்பில் உருவாகும் தேவதாஸ் படத்தின் முன்னோட்டம். #Devadoss
தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ்.
‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ்.
இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார்.
மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது திரைகதை. மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர்.
ஒளிப்பதிவாளர் யுகா காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்க, இப்படத்திற்கு தினேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு ரூபன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்
`தேவராட்டம்'.
கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,
என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள்.
ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.
படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள படம் `அயோக்யா'.
விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவாரியா, சோனியா அகர்வால், சச்சு, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனா கான் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - வி.ஐ.கார்த்திக், படத்தொகுப்பு - ரூபன், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சி - ராம்-லக்ஷ்மன், கதை - வக்கந்தம் வம்சி, ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் யுகபாரதி, விவேக், ரோகேஷ், இணை இயக்குநர் - துரை கண்ணன், நடனம் - சோபி, பாஸ்கர், ஒலி - உதயகுமார், நிர்வாக தயாரிப்பு - டி.முருகேசன், தயாரிப்பு மேற்பார்வை - அந்தோணி சேவியர், இணை தயாரிப்பாளர் - பிரவீண் டேனியல், தயாரிப்பு - பி.மது, எழுத்து, இயக்கம் - வெங்கட் மோகன்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் விஷால் எதிர்மறை போலீஸ் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வருகிறது. #Ayogya #Vishal #RaashiKhanna
அயோக்யா டிரைலர்:






