என் மலர்
சினிமா செய்திகள்
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'.
- இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அயலான் போஸ்டர்
இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'அயலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஏலியனுடன் படக்குழு இருப்பது போன்று உள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை.
- வி.ஏ. துரை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.
விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' விக்ரம், சூர்யா நடித்த 'பிதாமகன்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்து உள்ளார்.

சமீபத்தில் வி.ஏ. துரை வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும் நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர்கள் பலரும் அவருக்கு உதவினர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் வி.ஏ.துரை நேற்று இரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது.
- தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 பற்றிய அப்டேட்-ஐ அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில், "உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன் தளபதி 68 துவங்கியது. இது மகிழ்ச்சியான ரோலர் கோஸ்டர் ரைட் ஆக இருக்க போகிறது. லியோ வெளியீட்டை தொடர்ந்து அனைத்து புகைப்படங்கள் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்படும். கடவுள் கருணை மிக்கவர்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகும் புதிய படம் லியோ.
- லியோ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரல் ஆனது.
இந்த நிலையில், லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
- இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.

அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் சுந்தர் சி, அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் - ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- ரஜினியன் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
- தலைவர் 170 படத்தை லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தற்காலிகமாக 'தலைவர் 170' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படக்குழு விவரங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி, 'தலைவர் 170' படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக லைக்கா புரோடக்ஷன்ஸ் நேற்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் இன்று அறிவித்து இருக்கிறது. இது குறித்த எக்ஸ் பதிவுகள் வைரல் ஆகி வருகின்றன.
- பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ளன.
- பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் அறிவிப்பு.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருப்பதை அடுத்து ஏழாவது சீசன் தொடங்கப்படட்டது. இன்று ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் யார் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு..,
சரவணா விக்ரம்
மாயா எஸ் கிருஷ்ணா
விஷ்னு விஜய்
ஐஷூ
ஜோவிகா விஜயகுமார்
அக்ஷயா உதயகுமார்
மணிசந்திரா
வினுஷா தேவி
நிக்சென்
பிரதீப் அந்தோனி
ரவீனா தாஹா
பூர்ணிமா ரவி
கூல் சுரேஷ்
யுகேந்திரன் வாசுதேவன்
விசித்ரா
இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை போன்றே ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர்.
- லைக்கா நிறுவனம் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
- அக்ஷய்குமார் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் லைக்கா தயாரிக்கிறது.
இந்தியாவின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் வெற்றிகரமான பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது மலையாள திரையுலகில் இதுவரை மேற்கொள்ளப்படாத பிரம்மாண்டமான பொருட்செலவில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இதன் மூலம் மலையாள திரையுலகில் பிரம்மாண்டமான தயாரிப்புடன் லைக்கா நிறுவனம் களமிறங்குகிறது. இந்நிறுவனம் தற்போது இயக்குநர் ஷங்கர் - 'உலகநாயகன்' கமல்ஹாசன் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், 'லால் சலாம்' எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து 'ஜெய்பீம்' புகழ் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தையும், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இதுதவிர அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தையும் தயாரிக்கிறது.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் முன்னணி நட்சத்திர நடிகரான அக்ஷய்குமார் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
மேலும் லைக்கா புரொடக்ஷன்ஸின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஜி. கே. எம். தமிழ் குமரன் இந்த படைப்புகளை தொடர்ந்து வேறு சில முன்னணி நட்சத்திர நடிகர்களிடம் அடுத்தடுத்த பிரம்மாண்டமான படைப்புகள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.
- லால் சலாம் படத்தில் முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் நடித்துள்ளார்.
- படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், லால் சலாம் படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
- நாகபூஷனா, 'இக்கத்' திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகர் விருது வாங்கியவர்
- பிரேர்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்
கன்னட திரையுலகில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் நாகபூஷனா (37).
"சங்கஷ்ட கர கணபதி" எனும் திரைப்படம் மூலம் 2018ல் திரையுலகில் அறிமுகமான நாகபூஷனா, இக்கத், படவா ராஸ்கல் மற்றும் ஹனிமூன் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். 'இக்கத்' படத்திற்காக சிறந்த நடிகர் விருது வாங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகபூஷனா நேற்றிரவு 09:45 மணியளவில் பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியிலிருந்து புறநகர் பகுதியான கொனனகுன்டே எனும் இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் வசந்தபுரம் மெயின் ரோடு அருகில் வரும் போது அங்கு கிருஷ்ணா (58) மற்றும் அவரது மனைவி பிரேர்னா (48) எனும் தம்பதி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். காரை ஓட்டி வந்த நாகபூஷனா தீடிரென கட்டுப்பாட்டை இழந்தார். இதை தொடர்ந்து நடந்து சென்ற தம்பதியர் மீது கார் மோதியது. அவர்கள் மீது மோதிய கார், அருகே இருந்த ஒரு மின்சார கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தினை தொடர்ந்து இருவரையும், நாகபூஷனா உடனடியாக முனைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இருந்தும், துரதிர்ஷ்டவசமாக பிரேர்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கால்கள், தலை மற்றும் வயிற்று பகுதியில் அடிபட்ட கிருஷ்ணாவிற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியதற்காக நாகபூஷனா மீது குமாரசுவாமி போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைவர் 170 படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.
- தலைவர் 170 படத்தில் நடக்க உள்ள நடிகர்கள் விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்து இருந்தது.
லைக்கா புரோடக்ஷனில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் நடக்க உள்ள நடிகர்கள் விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்து இருந்தது.
அதன்படி, இன்று 'தலைவர் 170' படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக லைக்கா புரோடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. மேலும், அனிருத் இணைவதால் பன்மடங்கு ஆகும் தலைவர் 170 படக்குழுவின் உற்சாகம் என லைக்கா புரோடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள பதிவு சமூகவளத்தில் வைரலாகி வருகிறது.
Meet the music director of #Thalaivar170
— Lyca Productions (@LycaProductions) October 1, 2023
? Mr. Anirudh Ravichander#Thalaivar170Team's energy is pumped up with @anirudhofficial on board ????? @rajinikanth @tjgnan @RIAZtheboss @V4umedia_ @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran #ThalaivarFeast ? pic.twitter.com/lL1Ak4aj2W
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார்.
- ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாரா, தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ஒரு படத்துக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதுதவிர விளம்பரங்களிலும் நடித்து வருமானம் ஈட்டி வருகிறார்.
வேறு சில தொழில்களிலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளார்.
சமீபத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்களது முகங்களையும் வெளியுலகுக்கு காண்பித்தனர்.
இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு பறந்துள்ளனர். புதிய தொழில் நிறுவனம் தொடங்குவதற்காக சென்ற அவர்கள், அங்குள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் புதிய தொழில்களிலும் முதலீடு செய்து வருவதால் நயன்தாரா முன்பை விட சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.






