search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One to One"

    • இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.

     

    அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் சுந்தர் சி, அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் - ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    ×