என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
    • படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. 'விடாமுயற்சி' திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

    • அன்றைய தினம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
    • பாடகி சித்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.


    அந்த வீடியோவில் பாடகி சித்ரா, ராமர் கோவில் திறப்பு தினத்தன்று மதியம் 12. 20 மணிக்கு அனைவரும் ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். மாலை நேரத்தில் திருக்கார்த்திகைக்கு தீபம் வைக்கிற மாதிரி வீட்டோட எல்லா இடத்திலயும் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்விவகாரத்தில் பாடகி சித்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

    • ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கும், மாட்டு உரிமையாளருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கலன்றும், பாலமேட்டில் நேற்றும் நடைபெற்றன.

    இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.


    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கும், மாட்டு உரிமையாளருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர்கள் அருண் விஜய், சூரி மற்றும் ஏ.எல். விஜய் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். விழா மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். இதனிடையே விழா மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நடிகர் அருண் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    • யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘தூக்குதுரை’.
    • இப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது 'ட்ரிப்' படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'தூக்குதுரை' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இனியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மனோஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'தூக்குதுரை' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • மகேஷ் பாபு நடித்துள்ள திரைப்படம் ‘குண்டூர் காரம்’.
    • இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியானது.

    இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குண்டூர் காரம்'. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    'குண்டூர் காரம்' திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு பீடி குடித்தது சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "குண்டூர் காரம் திரைப்படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி.


    முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிட்டது. பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருந்ததால் படம் முழுவதும் பயன்படுத்தினோம். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்" என்று கூறினார்.

    • நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.
    • இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ' என்று இடம்பெற்றுள்ள வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆனது.

    இதையடுத்து நடிகர் சந்தானம் தனது வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின்போது 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ' என்ற ஆடியோவுக்கு 'நா அந்த ராமசாமி இல்ல' என பதில் கூறும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


    இந்த வீடியோ வெளியான சில நேரத்திலேயே வைரலானது. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். வீடியோ சர்ச்சையான நிலையில், இதனை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார்.


    • பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது.
    • இதன் டைட்டிலை நடிகை அர்ச்சனா வென்றார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி யாரு டைட்டில் வின்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.



    இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகினார். மேலும், இரண்டாவது இடத்தை மணி மற்றும் மூன்றாவது இடத்தை மாயா பிடித்தார்கள்.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவிற்கு விருது கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் அமிதாப் பச்சன் 'கல்கி 2898- ஏடி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கல்கி 2898- ஏடி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோனே கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.

    இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சன், அயோத்தியில் குடியேறவுள்ளார். அதாவது, அயோத்தியின் சரயு நகரில் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை இவர் வாங்கியுள்ளதாகவும் இந்த நகரம் வரும் மே 22-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் வாங்கியுள்ள நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.14.5 கோடி எனவும் இந்தப் புதிய நகரத்தை லோதா நிறுவனம் உருவாக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


    உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம்தேதி நடைபெற உள்ளது. அன்று ராமர் சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் சேதுபதியின் 50-வது படம் 'மகாராஜா'.
    • இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    மகாராஜா போஸ்டர்

    இந்நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக 'மகாராஜா' படக்குழு இப்படத்தின் இரண்டாது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கையில் கத்தியுடன் ரத்த காயங்களுடன் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

    ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


    அயலான் போஸ்டர்

    இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் 'காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு' என கமெண்ட் செய்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'.
    • இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

    அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்த 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து இப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.


    இதன்பின்னர், இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது. அதுமட்டுமல்லாமல், மும்பையை சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார்.

    இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தை ஓடிடியில் இருந்து நீக்குவது சரியல்ல என சிலர் கருத்து தெரிவித்தனர்.


    இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் "இந்தியாவில் தணிக்கை செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை. இது ஓடிடி-களுக்கும் பொருந்தும். தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடி-யில் இருந்து நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல. ஒரு படத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் தணிக்கை குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும்" என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' திரைப்படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார்.


    கங்குவா போஸ்டர்

    இதைத்தொடர்ந்து 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    ×