என் மலர்
சினிமா செய்திகள்
- நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது.
- இந்நிறுவனம் கடந்த ஆண்டு ‘லியோ’ உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.
சினிமா துறையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு 'லியோ' உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு எந்தெந்த படங்களை வெளியிடவுள்ளது என்ற பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2'. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்'. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் 'சொர்க்க வாசல்'.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்.கே.21'. இயக்குனர் கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரிவால்வர் ரீட்டா'. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து அரும் 'மகாராஜா'. இயக்குனர் கணேஷ் ராஜா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' போன்ற படங்களை வெளியிடவுள்ளது. இது தொடர்பான போஸ்டர்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
Will @KeerthyOfficial be able to unfold the truth? ?#Kannivedi is coming soon on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada after theatrical release! #NetflixPandigai pic.twitter.com/WkwHOF9QFT
— Netflix India South (@Netflix_INSouth) January 17, 2024
- விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
- இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் விஷ்ணு விஷால் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், "தலைவரின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும். பிப்ரவரி 9-ஆம் தேதி உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'.
- 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தன் கனவை நனவாக்க ஒரு இளைஞன் சந்திக்கும் கஷ்டங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
- இப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.

இதையடுத்து, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணத்தை திரும்ப கொடுத்தால் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிடலாம் என கடந்த நவம்பர் 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து பணத்தை திரும்பி செலுத்தாததால் படத்தை இதுவரை வெளியிட முடியவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
- சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்’.
- இப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 'ஃபைட்டர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்திய விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் சீருடையில் மிருதுவாக தெரியும் ஹிருத்திக் ரோஷன் போர் விமானங்களை பறக்க விட்டு சாகச செயல்களில் ஈடுபடும்போது பார்வையாளர்கள் மூச்சடைத்துப் போவார்கள் என்பது நிச்சயம். 'ஃபைட்டர்'படத்தின் டிரைலர் 2019-ல் புல்வாமா தாக்குதலின் பின்னணியை கதாபாத்திரத்தின் மூலம் காட்டுகிறது. இந்திய விமான படையின் தாக்குதலின் ஒரு பார்வையையும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கடினமான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது.

'ஃபைட்டர்' திரைப்படம் இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஹிருத்திக் ரோஷனின் முதல் 3டி படமாகும். அத்துடன் இது 3d imax வடிவத்திலும் வெளியாக உள்ளது.
- நடிகர் அஜித் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு அஜித்தின் 'வீரம்' திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
- இப்படத்திற்கு திரையரங்குகளில் அதிக ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் 12-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது. 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில், இயக்குனர் விஜய் பேசியதாவது, எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. படம் வெளியாகும்போது எங்களுக்கு திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது. இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு ஃபீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்து நீங்கள் புஷ் செய்வதுதான் படத்தை இன்னும் அதிக பார்வையாளர்களுக்குக் கொண்டு போகும் என மோகன் சார், விஜயகுமார் சார் சொன்னார்கள். அதன்படிதான் நாங்கள் நடந்து கொண்டு வருகிறோம்.

படத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல லைகா சரண் சார், சுரேஷ் சந்திரா சார், ஷ்யாம் சார் என அனைவரும் சேர்ந்து உழைத்தோம். படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மீது அந்த நம்பிக்கையை கொடுத்த மீடியா விமர்சனங்களுக்கு நன்றி. இப்போதுதான் எங்களுக்கு முதல் வாரம் போல. நீங்கள் அடுத்தடுத்து கொடுக்கும் ஆதரவுதான் எங்களை இன்னும் அடுத்துச் செல்லும். என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. பட்ஜெட் பெரிதாகத் தேவைப்படுகிறது எனச் சொன்னபோது, அதற்கு முழு ஆதரவுக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் லைகாவுக்கும் நன்றி. அந்த அளவுக்கு படத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

'அச்சம் என்பது இல்லையே' என இருந்த படத்தின் டைட்டிலை 'மிஷன்' என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்ற லைகா சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ்க்குமரனுக்கும் நன்றி. படப்பிடிப்பில் செட் பலமுறை விழுந்து, மீண்டும் அதை உருவாக்கினோம். இப்படி படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படத்திற்கு பாசிட்டிவான ஆதரவு கொடுத்து எடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பெரிய பலம். அருண் விஜய் சார், இயல், அபிஹாசன், ஏமி, நிமிஷா, பரத், சரவணன், ராமலிங்கம் மேஸ்திரி என அனைவருக்கும் நன்றி. படம் இன்று இவ்வளவு பெரிதாகதெரிய இவர்கள் தான் காரணம். படத்தில் முக்கியமான விஷயம் கதைதான். அதை கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார். அது மேஜிக் போல நடந்துவிட்டது. அந்தத் தருணங்களில் எங்களுக்கு பாதுகாப்பைச் சரியாக செய்து தந்த செல்வா மாஸ்டருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் மீண்டும் நன்றி என்றார்.
- தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் வசூலையும் குவித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவரின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
- கார்னிவெல் விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
- இதன் நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். முதல் -அமைச்சர் ரங்கசாமி நடிகை ஆண்ட்ரியாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

இசை நிகழ்ச்சியில் "ஊம்... சொல்றியா...ஊகூம் சொல்றியா.. மற்றும் நடிகர் விஜய்யின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
இசை நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஆண்ட்ரியாவின் காரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் ஆண்ட்ரியா சிக்கி திணறினார். உடனே போலீசார் அவரை சிரமத்திற்கிடைய பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காரை துரத்தி சென்றனர். ஆண்ட்ரியா கார் பறந்து சென்றது.

விழா முடிந்து இரவு 9 மணிக்கு கூட்டம் கலைந்தது. ஒரே நேரத்தில் அனைவரும் முண்டியடித்து சென்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அப்போது மக்கள் ரெயில்வே கேட்டை கடக்கும் போது சென்னை ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங்கில் கேட் இறக்கப்பட்டது. இதில் தண்டவாளத்தின் நடுவே பலரும் சிக்கினார்கள். இதனால் மீண்டும் கேட் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதன் காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
- மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன்.
- இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இனி எதையும் பதிவிடப்போவதில்லை. என் அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் எனது உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும் என நினைக்கிறேன். அதனால் அப்படியே இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- இயக்குனர் அமீர் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் இயக்குவது மட்டுமல்லாமல் பல படக்களில் நடித்தும் உள்ளார்.
2002-ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தவர் அமீர். பின்னர் 'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதிபகவன்' போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதனை சமீபத்தில் இயக்குனர் அமீர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் அமீர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,
"தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்.."
என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
"தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!" என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- தி ராஜா சாப் படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
- இந்த படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் 'தி ராஜா சாப்' ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.
பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் மாருதி இயக்க இருக்கிறார். பிரபாஸ் மற்றும் இயக்குநர் மாருதி மீண்டும் இணையும் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு 'தி ராஜா சாப்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட் பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். 'தி ராஜா சாப்' முழுமையான பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. பிரபாஸ் இதுவரை ஏற்றிருக்காத ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் தயாராவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வரா கவனிக்க, வி எஃப் எக்ஸ் பணிகளை 'மகதீரா', 'பாகுபலி' போன்ற படங்களில் பணியாற்றிய கமல் கண்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொள்கிறார்கள்.






