என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
    • இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.


    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "படத்தின் டிரைலரை பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக 'சிங்கப்பூர் சலூன்' என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.


    கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குனர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்." என்றார்.

    • இயக்குனர் தமிழ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குனர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் பேசப்பட்டுள்ளது.


    சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும் இந்த படத்தில் 'கனா' புகழ் தர்ஷன், 'ஹிருதயம்' தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர். தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.


    இப்படம் குறித்து இயக்குனர் தமிழ் கூறியதாவது, நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமர்சையாக சித்தரிக்கும் படம் இது என்றார்.

    • 80-களில் பொழுதுபோக்கிற்கு இருந்த ஒரே சேனல் தூர்தர்ஷன் தான்.
    • வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பலர் விரும்பி பார்ப்பார்கள்.

    கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்சிகள் பெரிதும் எங்கும் இல்லாத போது பொழுதுபோக்கிற்கு இருந்த ஒரே சேனல் தூர்தர்ஷன் தான். இதில், குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பலர் விரும்பி பார்ப்பார்கள்.

    இதில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் பாடல்கள் ஒளிப்பரப்பாகும். ஒரு வார நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த வார நிகழ்ச்சியை காண்பதற்கு வாரம் முழுவதும் மக்கள் பலர் ஏக்கத்தோடு காத்திருந்த நாட்களும் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு அந்த காலத்தில் பெரும் வரவேற்பு இருந்தது.


    இதையடுத்து தொழில்நுட்பங்கள் வளர வளர புது புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சிகள் வந்ததும் மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்து பார்த்த ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியையும் மறந்து விட்டனர்.

    இந்த நிலையில் தற்போது தூர்தர்ஷன் மீண்டும் புதுப்பொலிவுடன் திரும்பி வந்துள்ளது. டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.


    இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை (20.01.2024) வெளியிடுவார்" என்று குறிப்பிட்டு போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    • நடிகர் விஜய் ஆண்டனி 'ஹிட்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.


    'ஹிட்லர்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, இயக்குனர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார்.


    ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கவுதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துகள். விவேக், மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் இயக்குனர் முரளி அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி என்றார்.

    • வல்ச்சர் ஸ்டண்ட் விருதுகள் 2023ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது
    • பதான், ஜவான் ஆகிய படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தன

    ஆக்ஷன் திரைப்படங்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்தாலும், திரைப்பட விருதுகளில் சண்டை காட்சி பிரிவில் விருது வழங்குதல் குறைவு.

    சிறந்த நடிகர், நடிகையர், வில்லன், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும், சண்டை காட்சிகளை வடிவமைப்பவர்களுக்கு மக்களின் பாராட்டுகளே பெரிய விருதாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த வருடத்திலிருந்து அமெரிக்காவின் வாக்ஸ் மீடியா நெட்வொர்க்ஸ் (Vox Media Networks) நிறுவனத்தின் ஒரு அமைப்பான வல்ச்சர் (Vulture) எனும் பத்திரிகை, வல்ச்சர் ஸ்டண்ட் அவார்ட்ஸ் (Vulture Stunt Awards) என திரைப்படங்களில் இடம்பெறும் பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுக்கு பரிசுகள் வழங்க தொடங்கியது.

    சண்டை காட்சிகள் என ஒரே பட்டியலிடாமல், வான்வெளி, தரை, வெடி விபத்து காட்சிகள், சேசிங் என பல உட்பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுவது இதுவரை திரையுலகில் இல்லாத சிறப்பான அம்சம் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    2024க்கான விருதுக்கு 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை வெளியான படங்களில் உலகின் முன்னணி ஆக்ஷன் கதாநாயகர்களான டாம் க்ரூஸ் (Tom Cruise) மற்றும் கீனு ரீவ்ஸ் (Keanu Reeves) ஆகியோரின் ஹாலிவுட் படங்கள் பட்டியலில் உள்ளன.

    இந்நிலையில், இந்தி திரையுலக முன்னணி கதாநாயகனான ஷாருக் கான் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "பதான்" (Pathan) மற்றும் "ஜவான்" (Jawan) எனும் இரு படங்களும் போட்டியில் இடம்பெற்றுள்ளன.


    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரியில் வெளியான பதான், சிறந்த வான்வெளி ஸ்டண்ட் காட்சி மற்றும் சண்டை காட்சி பொது பிரிவு என இரு பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் பதான் ரூ.1055 கோடி வசூல் செய்தது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியான ஜவான், சிறந்த வாகன ஸ்டண்ட், ஆக்ஷன் படங்களில் சிறந்த ஸ்டண்ட், சிறந்த ஆக்ஷன் திரைப்படம் என 3 பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் ஜவான் ரூ.1160 கோடி வசூல் செய்தது.

    போட்டியில் இந்திய ஸ்டண்ட் கலைஞர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மகிழும் வகையில் இப்படங்கள் விருதுகளை வெல்லுமா என்பது மார்ச் 4 அன்று தெரிந்து விடும்.

    • திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் இவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.


    இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான இந்த ஒரு லட்சம் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் மேலும் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதி ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்து 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

    'கேப்டன் மில்லர்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். தனுஷின் 51-வது படமான இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.


    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய பூஜையுடன் நேற்று தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.


    இந்நிலையில், தனுஷுடன் நடிப்பது குறித்து நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார். அவர் பேசியதாவது, இயக்குனர் சேகர் கம்முலா இப்படம் குறித்து கூறும்போதே இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்படவுள்ளது. தனுஷ் சார் மிகப்பெரிய நடிகர் அவருடன் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.


    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆரு கையி' பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.


    சலார் போஸ்டர்

    இந்நிலையில், 'சலார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 20-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை.
    • இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றார் நயன்தாரா.

    சென்னை:

    நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

    இதற்கிடையே, இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.


    இந்நிலையில் அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜெய் ஸ்ரீ ராம்... இந்தக் குறிப்பை கனத்த இதயத்துடனும், அன்னபூர்ணி திரைப்படம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடனும் எழுதுகிறேன். அன்னபூரணியை உருவாக்குவது ஒரு சினிமா முயற்சி மட்டுமல்ல, நெகிழ்ச்சியைத் தூண்டும் மற்றும் ஒருபோதும் கைவிடாத உணர்வைத் தூண்டுவதற்கான இதயப்பூர்வமான முயற்சியாகும்.

    இது வாழ்க்கையின் பயணத்தை பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டது. அங்கு தடைகளை சுத்த மன உறுதியுடன் கடக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். ஒரு நேர்மறையான செய்தியைப் பகிர்வதற்கான எங்கள் நேர்மையான முயற்சியில், நாம் கவனக்குறைவாக காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.


    முன்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அகற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை. இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன்.

    அன்னபூரணியின் பின்னால் உள்ள நோக்கம் உயர்த்துவதும் ஊக்கமளிப்பதும் ஆகும். துன்பத்தை ஏற்படுத்துவது அல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக திரைப்படத் துறையில் எனது பயணம் நேர்மறையைப் பரப்புவதற்கும், ஒருவருக்கொருவர் கற்றலை வளர்ப்பதற்கும் ஒரு ஒற்றை நோக்கத்துடன் வழிநடத்தப்படுகிறது. மனமார்ந்த வணக்கங்களுடன்... நயன்தாரா" என பதிவிட்டுள்ளார்.

    • இந்த படம் காமெடி கலந்த அரசியல் கதையம்சம் கொண்டது.
    • இந்த படத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வருபவர் எச். வினோத். இவர் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது.

    இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் 233-வது படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதுதவிர தீரன் அதிகாரம் 2 படத்தையும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இரு படங்களுக்கான பணிகள் தொடங்க தாமதம் ஆவதாக தெரிகிறது.

    இதன் காரணமாக இயக்குனர் எச். வினோத் மற்றொரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் காமெடி கலந்த அரசியல் கதையம்சம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.
    • இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.


    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்நிலையில், 'சலார்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆரு கையி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    ×