பிறவி பிரிஞ்சு.. கவனம் ஈர்க்கும் சலார் பாடல்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிறவி பிரிஞ்சு.. கவனம் ஈர்க்கும் சலார் பாடல்
Published on

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'சலார்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆரு கையி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com