search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dd tamil"

    • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டிடி தமிழ் என பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
    • டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

    சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமாக பிரசார் பாரதியின் கீழ் இயக்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைகாட்சியில், புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் டிடி தமிழ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் ஒளிபரப்பை தொடங்கியது.

    புதிய அம்சங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பொதிகை என்ற பெயரில் இதுவரை ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த இந்த தொலைக்காட்சி, பாரம்பரியம் குன்றாமல் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது. இவற்றில் நான்கு பொழுது போக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    • 80-களில் பொழுதுபோக்கிற்கு இருந்த ஒரே சேனல் தூர்தர்ஷன் தான்.
    • வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பலர் விரும்பி பார்ப்பார்கள்.

    கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்சிகள் பெரிதும் எங்கும் இல்லாத போது பொழுதுபோக்கிற்கு இருந்த ஒரே சேனல் தூர்தர்ஷன் தான். இதில், குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பலர் விரும்பி பார்ப்பார்கள்.

    இதில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் பாடல்கள் ஒளிப்பரப்பாகும். ஒரு வார நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த வார நிகழ்ச்சியை காண்பதற்கு வாரம் முழுவதும் மக்கள் பலர் ஏக்கத்தோடு காத்திருந்த நாட்களும் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு அந்த காலத்தில் பெரும் வரவேற்பு இருந்தது.


    இதையடுத்து தொழில்நுட்பங்கள் வளர வளர புது புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சிகள் வந்ததும் மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்து பார்த்த ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியையும் மறந்து விட்டனர்.

    இந்த நிலையில் தற்போது தூர்தர்ஷன் மீண்டும் புதுப்பொலிவுடன் திரும்பி வந்துள்ளது. டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×