search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Thai greetings"

    • விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டுவிட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது தி.மு.க.வின் வழக்கமாகி இருக்கிறது.
    • தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்க தி.மு.க. செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக தி.மு.க. அரசு அறிவித்ததோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப் பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறி முறைகளையும் வெளியிட்டிருந்தது.

    ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது.

    விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டுவிட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது தி.மு.க.வின் வழக்கமாகி இருக்கிறது.

    பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்க தி.மு.க. செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிதாக அமைக்கப்படும் சாலை யோரங்களில் கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது.
    • 32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஸ் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த தலைவர், அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.

    பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழைய வீட்டை புதுப்பித்து, அதற்கு வீட்டு தீர்வை செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது பழைய வீட்டுக்கு சேர்த்து தீர்வை வசூலிக்கப்படுகிறது. இது சரியா?. ஒரு வீட்டுக்கு இரண்டு தீர்வை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலை யோரங்களில் கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது. இதனால் மழை க்காலங்களில் மழைநீரோடு அடித்து வரப்படும் மணல் வாறுகாலில் தேக்கமடையும் சூழல் உள்ளது. எனவே, வாறுகாலின் உயரத்தை அதிகரித்து, சாலையில் ஆங்காங்கே குழாய் பதித்து, அதன் வழியாக மழைநீர் வாறுகாலில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

    32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.

    தொடர்ந்து, அவையில் வைக்கப்பட்ட 100 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ×