search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Council meeting"

    • பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைதலைவர் லதா முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் சுதர்சன் வரவேற்றார். பண்ணைக்காடு பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. பேரூராட்சித்தலைவரின் கணவர் கூட்ட அரங்கில் தலையிடுவதும், நிர்வாக விஷயங்களில் முழுமையாக தலையிடுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே புகார் அளிக்கின்றனர். உதயகுமார் காங்கிரஸ், 11-வது வார்டு கவுன்சிலர் பேசுகையில், பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவர் கணவர் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. தலைவருக்கு நிர்வாக விஷயத்தில் எவ்வித விபரங்களும் தெரியவில்லை. கூட்ட அரங்கில் தலைவரின் கணவர் பதிலளிக்கும் நிலை உள்ளது. பேரூராட்சியில் செய்யப்படும் வளர்ச்சிப்பணிகளில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறு கின்றன.

    தற்போது தீர்மானத்தில் கூட ஒரே பணி இரு இடங்களில் வந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் 10 நிமிடமே கூட்டங்கள் நடக்கின்றன. கவுன்சிலர்களுக்கு பேசும் அதிகாரம் மறுக்கப்படுகின்றது. ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கு வாய் பூட்டப்பட்டு அவர்கள் மிரட்டப்படுகின்றனர். அதிகாரிகளும் இதற்கு துணை புரிகின்றனர். தலைவரின் தன்னிச்சையான போக்கு அனைத்து கவுன்சிலர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் சுதந்திரமாக நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
    • உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கொடைக்கானல்,

    கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றக்கூட்டம் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் நாராயணன் வரவேற்றார் இக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

    சுப்பிரமணிபால்ராஜ் (அ.தி.மு.க):- நகரில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவ தில்லை. பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கவுன்சிலர்களை யார் என்று தெரியவில்லை. எனவே இதனை முறைப்படுத்த வேண்டும்.

    பரிமளா (தி.மு.க.):- நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை.

    ஆணையாளர்:- உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிரபா ஷர்மிலி (தி.மு.க.):- நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய கூட்டுக் குழு கூட்டம் நடத்த வேண்டும். நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

    ஜெயசுந்தரம் (அ.தி.மு.க.):- அரசு மூலம் சிறு வியாபாரிகளுக்கு தள்ளு வண்டி கடைகள் வழங்க ப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்க ளில் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஆணையாளர்:- இது அரசின் கொள்கை முடிவு. நாடு முழுவதும் ஏழை களுக்கு இலவச கடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் பகுதியில் சுமார் 1050 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அட்டை இல்லாதவர்கள் வருங்காலங்களில் கடை வைக்க முடியாது.

    தலைவர்:- நகரில் ஏற்பட்டு வரும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ரூ.41 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சுமார் 3.5 ஏக்கர் இடம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற னர். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அருள்சாமி (தி.மு.க.):- சீசன் தொடங்கியுள்ள நிலையில் துப்புரவு பணி யாளர்கள் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.

    ஆணையாளர்:- கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர். இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

    மோகன் (தி.மு.க.):- நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது அல்ல. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    போஸ் (சுயேட்சை):- பாக்கியபுரம் பகுதியில் 1959 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கழிப்பறையை காண வில்லை. இதில் உள்ள 6.15 சென்ட் இடத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    ஆணையாளர்:- நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் உடனடி ஆய்வு செய்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    பரிமளா (தி.மு.க.):- தங்கள் பகுதியில் உள்ள சமுதாயக் கூடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொறியாளர்:- நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    முடிவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    • பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
    • மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் தற்போது கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 6 க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி,தலைமை வகித்தார்.நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ்,சுகாதார ஆய்வாளர் சங்கர்,பணி மேற்பார்வையாளர் ராசு,கணக்காளர் சசிகுமார், மற்றும் வார்டு பொதுமக்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில்,கரையான்புதூர் சக்தி நகரில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும், கிருஷ்ணா நகர் பகுதியில் போர்வெல், அமைத்து சப்பை தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும், கரையான் புதூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், ராயர்பாளையம் மயானத்திற்கு போர் வசதி செய்து தர வேண்டும், பாசன வாய்க்காலில் கோழிக் கழிவுகள் போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை அருகே அமைய உள்ள மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதே போல வார்டு எண் 7-க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர் மன்ற உறுப்பினர் கனகுமணி துரைக்கண்ணன் தலைமை வகித்தார்.நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அபிராமி நகரில் தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் ராயர்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிக்க வேண்டும், தெருவிளக்குகள் பழுதடைந்ததை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பச்சாபாளையத்தில் நீர்நிலை அருகே மின் மயானத்தை அமைக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 2 சேடபாளையம் நியாய விலை கடை அருகிலும், வார்டு எண் - 3 டி. இ.எல். சி பள்ளி வளாகத்திலும், வார்டு எண் - 5 ல் குலாலர் அங்காளம்மன் கோயில் மண்டபத்திலும், வார்டு -13 ல் செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், அலுவலக மேலாளர் சண்முகராஜா, தலைமை எழுத்தர் சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டங்களில், அந்தந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, தார் சாலை, உள்ளிட்டவற்றை தீர்க்கக்கோரி கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுக்கள் விபரம் வருமாறு:-

    வார்டு எண்3ல் நாரணாபுரம் பகுதிக்கு புதிய ரேசன் கடை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்தல், பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும். வார்டு எண்.2ல் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கூடாது. சேடபாளையம்,தண்ணீர்பந்தல் முதல் அருள்புரம் வரை செல்லும் நெடுஞ்சாலை துறைக்கான தார் சாலையை அகலப்படுத்திட வேண்டும். சேடபாளையம் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். சேடபாளையம் பகுதியில் தெருநாய் தொல்லை இல்லாமல் செய்ய வேண்டும்.வார்டு எண்.5ல் டி.எம்.டி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் பெயர் பலகை அமைத்தல், மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். தெரு நாய் தொல்லையை அகற்ற வேண்டும்.

    அரசு கல்லூரி எதிரே பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். அம்மாபாளையம் பிரிவில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். மங்கலம் சாலையிலிருந்து ராயர்பாளையம் பகுதி வரை பி.ஏ.பி. வாய்க்கால் மண்பாதையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். வார்டு எண் 13ல் செட்டிபாளையம் சாலை பாலாஜி நகர் பகுதியில் ரேசன் கடை புதியதாக அமைக்க வேண்டும். அருள்ஜோதி நகர்,ராஜ கணபதி நகர் பகுதியில் தெருநாய் தொல்லைக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். கோவை -செட்டிபாளையம் சாலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தெருவிளக்குகள் பராமரித்தல், சாலைகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் சீராக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார் .பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தெருவிளக்குகள் பராமரித்தல், சாலைகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் சீராக வழங்குதல் ,பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க கொசு ஒழிப்பு மருந்து அடித்தல், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்பரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூடலூர் நகராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சி சார்பில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலா 50 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சி கூட்டம் தலைவர் பத்மாவதி லோகன்துரை தலைமையில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் உட்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேவர் சிலை மற்றும் இந்து நடுநிலைப் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டுதல், சுல்லக்கரை ஓடையிலிருந்து வடக்கு போலீஸ் நிலையம் வரை மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் வசதி செய்தல், கருணாநிதி காலனி மற்றும் காந்தி கிராமம் பகுதியில் உள்ள கழிப்பறை கட்டிடங்களை சீரமைப்பு பணி செய்தல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நகராட்சி சார்பில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலா 50 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது. கூட்டம் முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

    • வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தன்ராஜ், துணைத்தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான நகலை வாசித்தார்.

    கூட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தெருவிளக்குகள் இல்லாத கே.கே.நகருக்கு தெரு விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்வது என்றும், கணவாய்ப்பட்டி சாலையில் உள்ள மயானத்தை பார்வையிட்டு அங்கு தண்ணீர் வசதி உள்பட தேவையான வசதிகளை செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் என்றும், டென்னிஸ் கிளப் சாலையில் காலையில் குப்பை அள்ளுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதில் பள்ளி வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் மாணவர்கள் தாமதமாக செல்ல வேண்டி இருப்பதால் குப்பை அள்ளும் நேரத்தை மாற்ற வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்கள் போதிய அளவு இல்லாததால் பணிகள் தாமதம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

    செயல் அலுவலர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னத்துரை, சிவா, ரவி, மகாமுனி, மணிவண்ணன், முத்துமாரியம்மாள், சுமதி, சைதத்நிஷா, தமிழரசி அழகுராணி, ராமுத்தாய் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் முரளி மோகன் நன்றி கூறினார். கூட்டம் முடிந்தது பின்னர்அனைவரும் கணவாய் பட்டி சாலை மயானத்துக்கு தேவையான வசதிகளை செய்ய நேரில் சென்று பார்வையிட்டனர்.

    • புதிதாக அமைக்கப்படும் சாலை யோரங்களில் கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது.
    • 32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஸ் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த தலைவர், அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.

    பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழைய வீட்டை புதுப்பித்து, அதற்கு வீட்டு தீர்வை செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது பழைய வீட்டுக்கு சேர்த்து தீர்வை வசூலிக்கப்படுகிறது. இது சரியா?. ஒரு வீட்டுக்கு இரண்டு தீர்வை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலை யோரங்களில் கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது. இதனால் மழை க்காலங்களில் மழைநீரோடு அடித்து வரப்படும் மணல் வாறுகாலில் தேக்கமடையும் சூழல் உள்ளது. எனவே, வாறுகாலின் உயரத்தை அதிகரித்து, சாலையில் ஆங்காங்கே குழாய் பதித்து, அதன் வழியாக மழைநீர் வாறுகாலில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

    32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.

    தொடர்ந்து, அவையில் வைக்கப்பட்ட 100 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ×