என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி கவுன்சில் கூட்டம்"

    • வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தன்ராஜ், துணைத்தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான நகலை வாசித்தார்.

    கூட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தெருவிளக்குகள் இல்லாத கே.கே.நகருக்கு தெரு விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்வது என்றும், கணவாய்ப்பட்டி சாலையில் உள்ள மயானத்தை பார்வையிட்டு அங்கு தண்ணீர் வசதி உள்பட தேவையான வசதிகளை செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் என்றும், டென்னிஸ் கிளப் சாலையில் காலையில் குப்பை அள்ளுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதில் பள்ளி வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் மாணவர்கள் தாமதமாக செல்ல வேண்டி இருப்பதால் குப்பை அள்ளும் நேரத்தை மாற்ற வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்கள் போதிய அளவு இல்லாததால் பணிகள் தாமதம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

    செயல் அலுவலர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னத்துரை, சிவா, ரவி, மகாமுனி, மணிவண்ணன், முத்துமாரியம்மாள், சுமதி, சைதத்நிஷா, தமிழரசி அழகுராணி, ராமுத்தாய் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் முரளி மோகன் நன்றி கூறினார். கூட்டம் முடிந்தது பின்னர்அனைவரும் கணவாய் பட்டி சாலை மயானத்துக்கு தேவையான வசதிகளை செய்ய நேரில் சென்று பார்வையிட்டனர்.

    ×