எச். வினோத் - யோகி பாபு கூட்டணியில் புதிய படம்

இந்த படம் காமெடி கலந்த அரசியல் கதையம்சம் கொண்டது. இந்த படத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார்.
எச். வினோத் - யோகி பாபு கூட்டணியில் புதிய படம்
Published on

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வருபவர் எச். வினோத். இவர் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது.

இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் 233-வது படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதுதவிர தீரன் அதிகாரம் 2 படத்தையும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இரு படங்களுக்கான பணிகள் தொடங்க தாமதம் ஆவதாக தெரிகிறது.

இதன் காரணமாக இயக்குனர் எச். வினோத் மற்றொரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் காமெடி கலந்த அரசியல் கதையம்சம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com