என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சந்தானம் தற்போது 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

வடக்குப்பட்டி ராமசாமி
இந்நிலையில், 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'ஆபராக்கோ டாபராக்கோ' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Wait For More Surprises Today At 5pm.#AbarakkoDabarakko - First Single from #VadakkupattiRamasamy will unfold tomorrow #VadakkupattiRamasamyFromFeb2@karthikyogitw @akash_megha @vishwaprasadtg @peoplemediafcy @vivekkuchibotla @RajaS_official @Sunilofficial @nuttypillai… pic.twitter.com/R98VNjGsCF
— Santhanam (@iamsanthanam) January 20, 2024
- நடிகை பிரவீணா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு போலியாக உருவாக்கபபட்ட ஐ.டி.க்களில் இருந்து சமூக வலைதளங்களில் வெளியாகின.
- அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை பிரவீணா, அது தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் மீண்டும் புகார் செய்தார்.
கேரள மாநிலம் சங்கனாச் சேரியை சேர்ந்தவர் பிரபல திரைப்பட நடிகை பிரவீணா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்கள் மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்திருக்கிறார். பிரபலமான தமிழ் டி.வி. சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் கோமாளி, தீரன் அதிகாரம் ஒன்று, வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் யாரோ பரப்பி வருவதாக புகார் செய்தார்.

அதன்பேரில் நெல்லையைச் சேர்ந்த பாக்யராஜ் (வயது24) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு கேரள போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவர் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அந்த வழக்கில் இருந்து வாலிபர் பாக்யராஜ் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நடிகை பிரவீணா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு போலியாக உருவாக்கபபட்ட ஐ.டி.க்களில் இருந்து சமூக வலைதளங்களில் வெளியாகின. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை பிரவீணா, அது தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் மீண்டும் புகார் செய்தார்.
நடிகை படத்தை ஏற்கனவே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் பாக்யராஜ், நடிகையை பழிவாங்கும் விதமாக அவ்வாறு செயல்பட்டதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

பிரவீணா- பாக்யராஜ்
வாலிபர் பாக்யராஜ் எங்கு இருக்கிறார் என்று போலீசார் துப்பு துலக்கி வந்தனர். அவரை பிடிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பாக்யராஜ் பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் டெல்லியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை பிடிக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் கிரைமை சேர்ந்த குழுவினர் டெல்லி விரைந்தனர். அங்கு வாலிபர் பாக்யராஜை சுற்றிவளைத்து பிடித்தனர். நடிகை மற்றும் அவரது மகள் படத்தை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப் பட்ட பாக்யராஜை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். வழக்கு தொடர்பாக அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
- ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இந்த வதந்திக்கு நடிகர் விஜய் தேவர கொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, "எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்காது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலம் என்னை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பயோஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு காவேமிக்அரி ஒளிப்பதிவு செய்ய ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என பார்த்திபன் அறிவித்திருந்தார். அதன்படி இப்படத்திற்கு 'TEENZ' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்திபன் என்றாலே வித்தியாசம் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
- ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’.
- இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் 'அனிமல்'. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பாபிதியோல், டிருப்தி டிம்ரி, அனில்கபூர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

தந்தை, மகன் பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.
அனிமல் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, 'அனிமல்' படத்தின் காட்சியில் கணவராக நடிக்கும் ரன்பீர்- டிருப்தி டிம்ரியுடன் தூங்கியதால் ரன்பீர் கன்னத்தில் உண்மையாக அறைந்தேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. 'ஆக்ஷனும்', 'கட்டுக்கும்' இடையில் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

காட்சி முடிந்ததும் நான் உண்மையாக அழுதேன். ரன்பீரிடம் சென்று அது சரியா? நலமாக இருக்கிறீர்களா? என்றேன். காட்சியில் நான் நடிகையாக இருப்பதன் உச்சத்தை உணர்ந்தேன். 'அனிமல்' படத்திலும் காட்சியிலும் நான் நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.
- விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.
- நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனயடுத்து நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்று விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், "வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்களுக்கு உணவளித்தவர். உணவில் எந்த பாரபட்சமும் பார்க்ககூடாது என எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். அவர் பாதையில் நாங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டோம்.

பல நடிகர்கள் வளர வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த். அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் நான் வருகிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன்" என்று பேசினார்.
- ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அனிமல்'.
- இந்த படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்நிலையில், அனிமல் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா 'அனிமல்' திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.
- நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனயடுத்து நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை காமராஜர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரங்கல் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்று விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

இதில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, எல்லோரும் இறந்த பின்னர் கடவுளாக மாறுவார்கள் என்பார்கள் ஆனால், விஜயகாந்த் வாழும் போதே கடவுளாக இருந்தார். எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் பள்ளி பாடப்புத்தகத்தில் கேப்டன் 'விஜயகாந்த்' பற்றி வரவேண்டும். வேறு எதற்காகவும் இல்லை மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்ற சின்ன ஒரு தலைப்பில் இருக்க வேண்டும். மனிதன் இப்படி வாழ்ந்தால் மக்கள் மனதில் வைத்திருப்பார்கள், அப்படி சொன்னாலே போதும். சத்ரியனுக்கு சாவில்லை என்று பேசினார்.
- விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
- லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று லைகா நிறுவனம் தன் மீது அவதூறு பரப்பி தனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை என்றும் கடன் பாக்கி வைக்கவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களுடைய சொத்துகளை முடக்க வேண்டும் என்று தான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக கணக்கு தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- சூரி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
இயக்குனர் துரை செந்தில்குமார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருடன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.
- இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில், "அடுத்த படத்துக்கு எல்லாமே தயாராகிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்'என குறிப்பிட்டுள்ளார்.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
All Set for#LegendsNext
— Legend Saravanan (@yoursthelegend) January 19, 2024
Process Started….
Revealing Soon…#Legend#LegendSaravanan#Anbanavan pic.twitter.com/rzUlwJBytg
- ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
- இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "படத்தின் டிரைலரை பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக 'சிங்கப்பூர் சலூன்' என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.

கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குனர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்." என்றார்.






