இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள்- விஜய் தேவரகொண்டா

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள்- விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.
Published on

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இந்த வதந்திக்கு நடிகர் விஜய் தேவர கொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, "எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்காது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலம் என்னை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com