விஸ்வாசத்துல எப்போதும் ஜெயிக்கிறது சொக்கன் தான்- ட்ரெண்டாகும் சூரி பட வீடியோ

சூரி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
விஸ்வாசத்துல எப்போதும் ஜெயிக்கிறது சொக்கன் தான்- ட்ரெண்டாகும் சூரி பட வீடியோ
Published on

இயக்குனர் துரை செந்தில்குமார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருடன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com