பிக்பாஸ் குழுவிற்கு விருந்தளித்த கமல்ஹாசன்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது.இதன் டைட்டிலை நடிகை அர்ச்சனா வென்றார்.
பிக்பாஸ் குழுவிற்கு விருந்தளித்த கமல்ஹாசன்
Published on

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி யாரு டைட்டில் வின்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகினார். மேலும், இரண்டாவது இடத்தை மணி மற்றும் மூன்றாவது இடத்தை மாயா பிடித்தார்கள்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவிற்கு விருது கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com