என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிக்கும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க சுரேஷ் கோபி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
    கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், காக்கி படடங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டாக்டர் தோற்றத்தில் விஜய் ஆண்டனியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக விக்ரமின் `ஐ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood #SureshGopi

    சசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அக்காள்-தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படத்திற்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். #SivappuManjalPachai
    ‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ படம் வரை உணர்வுகளை மையப்படுத்தி, ஜனரஞ்சகமாக முறையில் தனது கதையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இயக்குநர் சசி. இவர் அடுத்ததாக சித்தார்த் - ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். முதலில் `ரெட்ட கொம்பு' என பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் தலைப்பை ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று மாற்றியுள்ளனர்.

    அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் இந்த படம் பற்றி இயக்குநர் சசி பேசும் போது,

    ‘‘அனைத்து தரப்பினரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காவாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோள் நடிக்கிறார். இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம், இது. இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.


    முதல்முறையாக, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில், ‘பைக் சாம்பியனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.

    அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார்.’’ என்றார். #SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #Lijomol

    ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யூடர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பூமிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Bhoomika
    ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யூடர்ன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கவர்ச்சியான வேடங்களை விட குடும்பபாங்கான வேடங்களிலேயே ரசிகர்களை கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட பூமிகா, தற்போது 40 வயதை கடந்த நிலையில் கனமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள்கிறார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென்று போட்டோஷூட் நடத்தினார். அதில் தொடை தெரியும் அளவுக்கு படுகவர்ச்சி உடைகள் அணிந்து போஸ் அளித்ததுடன் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு தரப்பு அவரை பாராட்டினாலும், கவர்ச்சி காட்டி சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட காத்திருப்பதாக சிக்னல் தருகிறீர்களா?



    உங்களின் எளிமையான நடிப்பும், அழகான புன்னகையும்தான் இத்தனை நாள் ரசிகர்களை கவர்ந்தது அதை மறந்துவிடாதீர்கள் என்று சிலர் பூமிகாவை விமர்சித்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியான பூமிகா தற்போது உடல் முழுக்க மூடியபடி சுடிதார் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, திருநங்கைகளை பிரித்து வைப்பது தவறு என்று பேட்டியளித்துள்ளார். #VijaySethupathi #SuperDeluxe
    நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் வந்த அவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார்.

    சமீபத்திய படங்களில் 96 அவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தை பிற மொழிகளிலும் போட்டி போட்டு தயாரிக்கின்றனர்.

    அடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், தெலுங்கு, தமிழில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

    இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.



    விஜய் சேதுபதி இந்த தோற்றத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “படத்தில் ஆணாக இருக்கும் நாம் எளிதாக திருநங்கை கதாபாத்திரத்தை செய்து விடலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அந்த மாதிரி நடிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இந்த சமூகம் இந்த திருநங்கைகளை ஏன் இப்படி பிரித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் மனிதர்கள்தான். சாதி ஏற்றத்தாழ்வு போல் இதையும் தனித்தனியா பிரித்து வைப்பது தவறு. இது பெரிய அவமானம் ஆகும்” என்றார்.
    இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த சிம்பு, தற்போது முதல் முறையாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். #STR #Simbu
    ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது ஹன்சிகா நடித்துவரும் ‘மகா’ படத்தில், கவுரவ வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    தனது உடல் வாகை பழைய நிலைக்கே கொண்டுவர லண்டனில் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் சிம்பு, ‘மகா’ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.



    கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார். விரைவில், இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்க உள்ளது. மற்றொரு கதாநாயகன் படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை.
    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `பொட்டு' படத்தின் முன்னோட்டம். #Pottu #Bharath
    ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `பொட்டு'. 

    பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    வசனம் - செந்தில், ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ், இசை - அம்ரீஷ், பாடல்கள் - விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத், ஸ்டன்ட்   - சூப்பர் சுப்பராயன், படத்தொகுப்பு - எலீசா, கலை - நித்யானந், நடனம் - ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், கதை, திரைக்கதை, இயக்கம் - வடிவுடையான்.



    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.

    மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார். 

    படம் வருகிற மார்ச் 8-ந் தேதி திரைக்கு வருகிறது. #Pottu #Bharath #Namitha #Iniya #SrustiDange

    பொட்டு டிரைலர்:

    கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு `காதலிக்க யாருமில்லை' என்று தலைப்பு வைத்துள்ளனர். #KadhalikkaYarumillai #GVPrakashKumar #RaizaWilson
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `குப்பத்து ராஜா' வருகிற ஏப்ரல் 5-ந் தேதியும், `வாட்ச்மேன்' ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் தற்போது காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு, கமல் பிரகாஷ் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


    இதில் கமல் பிரகாஷ் இயக்கும் படத்திற்கு `காதலிக்க யாருமில்லை' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். #KadhalikkaYarumillai #GVPrakashKumar #RaizaWilson

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும்`கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரம் குரலில் ரசிகர்களின் உற்சாகத்தை தூண்டும் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. #KadaramKondan #ChiyaanVikram
    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

    இதுகுறித்து ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் சாரை ஒரு பாடலை பாட வைத்ததில் பெருமை கொள்கிறேன். முழு உற்சாகத்துடன் அவர் அந்த பாடலை சிறப்பாக பாடிக் கொடுத்திருக்கிறார். காலையில் இந்த பாடலை கேட்கும் போது நாள் முழுக்க அது உற்சாகத்தை கொடுக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்குஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KadaramKondan #ChiyaanVikram

    லோகேஷ் கனகராஜ், பாக்யராஜ் கண்ணன் படங்களை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Karthi #Jyothika
    கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஜித்து ஜோசப். அவர் அடுத்ததாக கார்த்தியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியானது.

    தற்போது படத்தின் கதையை ஜித்து ஜோசப் எழுதி முடித்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் கார்த்தியின் அண்ணியும், நடிகையுமான ஜோதிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் கார்த்தி மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள். இது ஜித்து ஜோசப்பின் வழக்கமான படம் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.



    கார்த்தி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Karthi #Jyothika #JeethuJoseph

    கங்கனா ரனாவத்திடம் அவரது காதல் பற்றி கேட்டபோது, தனக்கும் ஒரு காதலர் இருக்கிறார் என்றும் திருமணம் பற்றி கேட்டதற்கு நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். #KanganaRanaut
    தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணி கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்ததுடன் அந்த படத்தின் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார்.

    இதனால் ஏற்கனவே அந்த படத்தை இயக்கி வந்த கிரிஷுடன் மோதல் ஏற்பட்டது. அந்த பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்ததையடுத்து தனது அடுத்த படங்களில் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

    கங்கனா ரனாவத் முதலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷனை காதலித்தார். அவருடன் டேட்டிங்கிலும் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை தனது காதலை கங்கனா வெளிப்படையாக அறிவித்த போது அதை ஹிருத்திக் ஏற்க மறுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே பெரிய சர்ச்சை வெடித்தது. ஹிருத்திக் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்தார்.



    இந்த பிரச்சினை முடிவுக்கு வராமலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது கங்கனாவின் வாழ்வில் புதிய காதலன் வந்து இருக்கிறார். இந்தி பத்திரிகைகள் இது பற்றி எழுதி வந்தன. அவர் யார் என்ற கேள்விக்கு கங்கனாவே பதில் அளித்துள்ளார்.

    நான் என்றைக்குமே காதலைவிட்டு விலகி இருந்ததில்லை. கடந்த காலங்களில் பிரேக் அப், காதல் தோல்விகள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

    ஆனாலும் அதில் இருந்து நான் உடனே நகர்ந்து அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுவேன். தற்போதைக்கு காதலிக்கிறீர்களா என்கிறார்கள். என் வாழ்வில் தற்போது ஒரு காதலன் இருக்கிறார்.

    டேட்டிங் செல்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதற்காக அல்ல, என் வாழ்வில் எனக்கு பொருத்தமான ஒரு நபர் இருக்க வேண்டும். அதன் மூலம் என் வாழ்வை நான் சரியாக வழி அமைத்துக் கொள்வேன்.

    திருமணம் பற்றி கேட்கிறார்கள். நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். இந்தியாவில் ஒரு புறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை எனக்கு கவலை அளித்தாலும், எனக்கும் குழந்தை குடும்பம் வேண்டும் என்ற ஆசை உள்ளது.

    இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார். #KanganaRanaut

    எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் இணைந்து நடித்த பழம்பெரும் நடிகை குசலகுமாரி உடல்நலக்குறைவு காராணமாக காலமானார். #Kusalakumari #RIPKusalakumari
    எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் குசலகுமாரி (83). மன்மத லீலை, பராசக்தி, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்ததோடு 250 படங்களுக்கு மேல் நடனமாடி இருக்கிறார். 



    திருமணம் செய்துகொள்ளாமல் தனது தம்பி சுந்தரம் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த அவர் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். குசலகுமாரி மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Kusalakumari #RIPKusalakumari

    செல்வக்கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெடுநல்வாடை’ படம் நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி இருக்கிறது. #Nedunalvadai
    இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘நெடுநல்வாடை’.

    உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸில் தயாராக இந்த படம் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை தாண்டி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படம் வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இந்த படத்திற்கான ரிலீசுக்கு உதவி வருகிறார்.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

    50 தயாரிப்பாளர்ளின் சார்பில் பேசிய சுந்தர், கள்ளம் கபடமில்லாமல் படம் குறித்த பல ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக துவக்கத்தில் படத்தில் ஒரு வாரம் நடித்துவிட்டு நடிகர் அபிசரவணனுடன் ஓடிப்போன அதிதி மேனன் குறித்த பஞ்சாயத்துகளை மேடையிலேயே போட்டு உடைத்தார். 



    ‘படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. எனினும் செல்வக்கண்ணன் மீதுள்ள நம்பிக்கையில் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செலவு செய்து படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும், நட்பும் அப்படியே இருக்கும்’ என்றார்.

    நன்றி உரையாற்றிய இயக்குநர் செல்வக்கண்ணன், இந்தப் படம் எத்தனையோ முறை கைவிடப்பட வேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். ‘நெடுநல்வாடை’ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் என்றார். #Nedunalvadai #NedunalvaadaiFromMarch15th

    ×