என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காதல் பிரிவுக்கு பின்னர் சிம்பு - ஹன்சிகா இருவரும் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் மஹா என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். #Maha #STR #Hansika
    வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்த துவங்கினர்.

    ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் மற்றும் ஹன்சிகா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


    இந்த நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு 
    தோற்றத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஹன்சிகா தனது ட்விட்டரில், நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த தகவல் வெளியே கசிந்துவிட்டது. ஆம், நானும், சிம்புவும் மஹா படத்தில் இணைந்துள்ளோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்மூலம் ஹன்சிகா - சிம்பு மீண்டும் இணைந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். #Maha #Hansika50 #Hansika #STR

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும், படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

    இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது.


    இந்த நிலையில் படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

    தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸ், அவரது மகளாக நடித்தது அதிர்ஷ்டம் என்று கூறியிருக்கிறார். #NivethaThomas
    தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இளம் நடிகை நிவேதா தாமஸ். அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறியதாவது:-

    “எனக்கு சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரள அரசிடம் விருதும் வாங்கினேன். குழந்தை நட்சத்திரமாக வந்தவர்கள் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிவிட்டனர். சிலர் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டனர்.

    ஆனால் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போது கதாநாயகியாகவும் மாறி விட்டேன். நான் மலையாள குடும்பமாக இருந்தாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். இதனால் தமிழ், மலையாள மொழிகள் தெரியும், இப்போது தெலுங்கும் கற்றுக்கொண்டேன். சினிமாவில் கதைதான் ஆத்மா. கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.



    நடிகர்-நடிகைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கதை நன்றாக இல்லாவிட்டால் படம் ஓடாது. எனவே சினிமாவுக்கு கதைதான் ஆத்மா. இந்த வருடம் எனது நடிப்பில் 5 படங்கள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்தது அதிர்ஷ்டம்.

    அந்த நடிகையை விட இந்த நடிகை சிறப்பாக நடித்தார் என்று ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. கதாநாயகர்களோடு நடிகைகளை ஒப்பிட்டு பேசும் நிலை வரவேண்டும். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி இருக்கிறது. #Dhanush #Sneha
    விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்கும் "தயாரிப்பு எண் 34" என்ற தற்காலிக தலைப்பில் புதிய படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. 

    கொடி படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இது குறித்து துரை செந்தில்குமார் கூறும்போது, ‘கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மிகச்சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்பதை நான் உணர்கிறேன், அதை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்" என்றார்.



    இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இரட்டை இளம் இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள். 

    அடுத்து தனுஷ் மற்றும் ராட்சசன் புகழ் ராம்குமார் இணையும் "தயாரிப்பு எண் 35" படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    விஷால், ராசி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Vishal #Ayogya
    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷாலுடன் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

    இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், தற்போது இப்படத்தை ஏப்ரம் 19ம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இப்படத்தை வெளியிடும் உரிமையை ஸ்கிரின் சீன் நிறுவனம் பெற்றுள்ளது.



    அயோக்யா திரைப்படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்காகும். #Ayogya #Vishal 
    விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் ‘ஆலங்குருவிகளா...’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. #Bakrid #Vikranth #Aalanguruvigalaa
    விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இமான் இசையில் உருவாகி இருக்கும் ‘ஆலங்குருவிகளா...’ என்ற பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    திரை நட்சத்திரங்கள் பலரும் இந்த பாடலை கேட்டு படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் திரைப்படம் இந்தியாவின் முதல் ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி படம் என்பது குறிப்பிடத்தக்கது.


    எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு இன்று காலமானார். #TypistGopu
    பிரபல நடிகர் டைப்பிஸ்ட் கோபு. இவருக்கு வயது 85. லால்குடியை சொந்த ஊராக கொண்ட இவர் 50 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்தவர்.

    1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபால ரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது. 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

    பின்னர் சினிமாவில் சாது மிரண்டால், அதே கண்கள், எங்க மாமா, பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, வா ராஜா வா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சிம்லா ஸ்பெஷல், கற்பூரம், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, நாலும் தெரிந்தவன், சொந்தங்கள் வாழ்க, நத்தையில் முத்து, கல்லும் கனியாகும், தரிசனம், தேடி வந்த லெட்சுமி, சிவப்புச் சூரியன், பொண்ணு மாப்பிள்ளை, காசேதான் கடவுளடா, உரிமைக்குரல், ஒரு கைதியின் டைரி, உயர்ந்த மனிதன், கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், தேனும் பாலும், எங்க மாமா, வண்ணக்கனவுகள் போன்ற பல்வேறு படங்களில் நடித்தார்.

    டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா, இருநூறு பவுன் தங்க நகை, நிறைய வெள்ளி பாத்திரங்கள், வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தார். பின்னாளில் முதுமையும் வறுமையுமாகத்தான் மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். 

    எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். 

    டைப்பிஸ்ட் கோபுவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #TypistGopu
    விஜய் தேவ்ரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் மிகவும் பிரபலமான ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் மூலமாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. #Rashmika
    கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவ்ரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்க கார்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ராஷ்மிகா. இந்த வாய்ப்பு ரசிகர்களால்தான் இவருக்கு கிடைத்ததாக தகவல்கள் வருகிறது. 

    கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகாவிடம் தமிழில் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா, ‘இந்த கேள்வியை நீங்கள் ஹீரோக்களிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன்’ என தெரிவித்திருந்தார். ராஷ்மிகாவின் இந்த பதிலை சவாலாக ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் இணைய தளங்களில் ஹீரோக்களிடம் ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று கோரி வந்தனர்.



    இடையில் விஜய் நடிக்க அட்லீ இயக்கும் படத்தில் ராஷ்மிகா நடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து அதை பிரபலமாக்கினார்கள். அதன் பலனாக ராஷ்மிகா தற்போது தமிழில் அறிமுகம் ஆகிறார்.
    உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் என்று பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். #KRVijaya
    தமிழ் சினிமா கதாநாயகிகளில் புன்னகை அரசி என்ற பெருமையை பெற்றவர் கே.ஆர்.விஜயா. சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “கோடீஸ்வரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன். மீண்டும் நடிப்பது பற்றி கே.ஆர்.விஜயா அளித்த பேட்டியில் ’பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.



    முன்பு பரபரப்பாக நடித்துவிட்டு இருந்ததால் அப்போதைய புகழை நினைச்சு சந்தோ‌ஷப்பட நேரம் இல்லை. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. என் கணவர் `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரை பற்றியும் கவலைப்படாதே. எப்போதும் பூ, பொட்டு வைத்துக்கொள். உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோ‌ஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
    நோட்டா படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கும் தமிழ் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #VijayDevarakonda #Nayanthara
    நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. ஆனால் நோட்டா படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    தற்போது நயன்தாரா, விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். மேலும், முருகதாஸ்-ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் இவர்தான் கதாநாயகி என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
    அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா மற்றும் அலியா பட் நடிப்பில் மூன்று பாகங்களாக நடிக்கும் ‘பிரமாஸ்திரா’ படத்தின் லோகோ உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. #Brahmastra
    அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா என பல நட்சத்திரங்கள் இணையும் இந்தி திரைப்படமான ‘பிரம்மாஸ்த்ரா’ டைட்டில் லோகோ கும்பமேளா விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    கும்பமேளா விழாவில் 150 ட்ரோன்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்ட விளக்குகள் உதவியுடன் வானத்தில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.

    உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிரயாக்ராஜ் (பெயர்மாற்றப்பட்ட அலகாபாத்) நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரளும் கும்பமேளா விழாவின் போது ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.



    அதன் ஒரு பகுதியாக இம்முறை கண்கவர் நிகழ்ச்சியாக 150 ட்ரோன்கள் மூலம் வானத்தில் இந்திய தேசியக்கொடி தொடங்கி, பல வடிவங்கள் அமைத்துக்காட்டப்பட்டது.

    பிரம்மஸ்த்ரா படத்தின் லோகோவும் இதே முறையில் பிரமாண்டமாக அத்தனை மக்கள் முன்னணியிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர், அலியா பட் மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் இதை நேரில் கண்டுகளித்தனர்.

    பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இன்றைய நாளில் நடக்கும் கதைதான் என்றாலும், பீரியட் படத்துக்கான அம்சங்களும் இதில் இருக்கும் என இதன் இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்தி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் பாலிவுட் பாகுபலியான இந்த படம் மூன்று பாகங்களாக வெளிவருமாம். இதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் டிசம்பர் 25-ந் தேதி வெளிவருகிறது. தமிழிலும் வெளியாகிறது. #Brahmastra #AmitabhBachchan #Nagarjuna #RanbirKapoor #AliaBhatt 

    பிரமாஸ்திரா படத்தின் லோகோ:

    ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் உருவாகும் `ஐபிசி 376' படத்தில் போலீசாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா இதன் மூலம் ஆக்‌ஷன் ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கிறார். #IPC376 #NanditaSwetha
    நந்திதா ஸ்வேதா தற்போது தேவி 2, நர்மதா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நந்திதாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் நந்திதா ஸ்வேதா முதன்முறையாக ஆக்சன் கதாநாயகியாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.



    த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் முக்கியமானதாக இருக்கும். பிரபு சாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் இயக்கும் இந்த படத்திற்கு `ஐபிசி 376' என்று தலைப்பு வைத்துள்ளனர். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆர்.நிர்மல் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.


    பவர் கிங் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிப்பாளராக அறிமுகமாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. #IPC376 #NanditaSwetha

    ×