என் மலர்
சினிமா

அமிதாப், ரன்பீர், நாகார்ஜுனா நடிக்கும் பிரமாஸ்திரா படத்தின் லோகோ கும்பமேளாவில் வெளியிடப்பட்டது
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா மற்றும் அலியா பட் நடிப்பில் மூன்று பாகங்களாக நடிக்கும் ‘பிரமாஸ்திரா’ படத்தின் லோகோ உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. #Brahmastra
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா என பல நட்சத்திரங்கள் இணையும் இந்தி திரைப்படமான ‘பிரம்மாஸ்த்ரா’ டைட்டில் லோகோ கும்பமேளா விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கும்பமேளா விழாவில் 150 ட்ரோன்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்ட விளக்குகள் உதவியுடன் வானத்தில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிரயாக்ராஜ் (பெயர்மாற்றப்பட்ட அலகாபாத்) நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரளும் கும்பமேளா விழாவின் போது ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இம்முறை கண்கவர் நிகழ்ச்சியாக 150 ட்ரோன்கள் மூலம் வானத்தில் இந்திய தேசியக்கொடி தொடங்கி, பல வடிவங்கள் அமைத்துக்காட்டப்பட்டது.
பிரம்மஸ்த்ரா படத்தின் லோகோவும் இதே முறையில் பிரமாண்டமாக அத்தனை மக்கள் முன்னணியிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர், அலியா பட் மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் இதை நேரில் கண்டுகளித்தனர்.
பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இன்றைய நாளில் நடக்கும் கதைதான் என்றாலும், பீரியட் படத்துக்கான அம்சங்களும் இதில் இருக்கும் என இதன் இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் பாலிவுட் பாகுபலியான இந்த படம் மூன்று பாகங்களாக வெளிவருமாம். இதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் டிசம்பர் 25-ந் தேதி வெளிவருகிறது. தமிழிலும் வெளியாகிறது. #Brahmastra #AmitabhBachchan #Nagarjuna #RanbirKapoor #AliaBhatt
பிரமாஸ்திரா படத்தின் லோகோ:
Next Story






