என் மலர்

  நீங்கள் தேடியது "Brahmastra"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா.
  • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த படம் பிரம்மாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


  பிரம்மாஸ்திரா

  இப்படம் முதல் நாள் ரூ.75 கோடியை வசூலித்த நிலையில் 12-ம் தேதி வரையில் உலக அளவில் ரூ.225 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இன்று (14-09-2022) வரையில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தாகவல் வெளியாகியுள்ளது.


  பிரம்மாஸ்திரா

  அதுமட்டுமல்லாமல், பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.150 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
  • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

  'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


  பிரமாஸ்திரா

  ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

  இதையடுத்து, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, "சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவது போல் இருக்கிறது. எனது பயணம் இங்கு தான் தொடங்கியது. "விக்ரம்" திரைப்படம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. கமல் சார் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயன் முகர்ஜி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #Brahmastra
  பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிரம்மாஸ்திரா’. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக இயக்குனர் அறிவித்திருக்கிறார்.

  இதுகுறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான ‘பிரம்மாஸ்திரா’-வின் சமீபத்திய முக்கியமான பகிர்வு இது.

  இப்படத்தின் கனவானது என்னுள் 2011 இல் உருவானது. 2013-ல் ‘ஏ ஜாவானி ஹய் திவானி’ (Yeh Jawaani Hai Deewani) படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை, திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன்.

  கதை, திரைக்கதையாக்கம், கதாப்பாத்திரப்படைப்பு, இசை மட்டுமல்லாமல் விஎப்எக்ஸ் (vfx) துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான-பிரமாண்டமான இமாலய முயற்சி இது.  இப்படத்தின் லோகோவை 2019 கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம்; அப்போது கூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம்.

  ஆனால் கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் vfx தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர்.

  இதை மனதில் கொண்டு 'பிரம்மாஸ்திரா' திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுத்திருக்கின்றோம்.

  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  ×