அதிக வசூலை குவித்து ரன்பீர் கபூர் படம் சிறப்பிடம்

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா.மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்
Published on

'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த படம் பிரம்மாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பிரம்மாஸ்திரா

இப்படம் முதல் நாள் ரூ.75 கோடியை வசூலித்த நிலையில் 12-ம் தேதி வரையில் உலக அளவில் ரூ.225 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இன்று (14-09-2022) வரையில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தாகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாஸ்திரா

அதுமட்டுமல்லாமல், பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.150 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com