கமல் சார் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்.. நாகர்ஜுனா நெகிழ்ச்சி..

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நாகர்ஜுனா
நாகர்ஜுனா
Published on

'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரமாஸ்திரா

ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையடுத்து, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, "சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவது போல் இருக்கிறது. எனது பயணம் இங்கு தான் தொடங்கியது. "விக்ரம்" திரைப்படம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. கமல் சார் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com