என் மலர்
சினிமா செய்திகள்
நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்ரு' படத்தின் முன்னோட்டம். #Sathru #Kathir #SrustiDange
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சத்ரு'.
கதிர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். ராட்டினம் படத்தில் நாயகனாக நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜூன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - அம்ரிஷ், பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ, படத்தொகுப்பு - பிரசன்னா.ஜி.கே, கலை - ராஜா மோகன், சண்டைப்பயிற்சி - விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான்.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது,
இது ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதையில், ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் கதையில் படம் உருவாகி இருக்கிறது. குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெறியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு என்றார்.
படம் மார்ச் 8-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Sathru #Kathir #SrustiDange #Lagbaran
சத்ரு டிரைலர்:
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் சில மாற்றங்களுடன் புதிய பெயரில் சீனாவில் வெளியாக இருக்கிறது. #2Point0 #Rajinikanth
இந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அமீர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ படங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீசாகி வசூலை குவித்தன.
ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கிய படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்டமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியானது. ரஜினியின் படங்களுக்கு ஜப்பானில் வரவேற்பு உள்ளது. அதுபோல் சீனாவிலும் மார்க்கெட் உருவாகி இருக்கிறது. 2.0 படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இந்த படத்துக்கு 2.0 என்று சுருக்கமாக டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் சீனாவில் நீண்ட தலைப்புடன் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0வின் எழுச்சி) என படத்துக்கு புதிதாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தில் சீன ரசிகர்களை கவர்வதற்காக மேலும் சில வி.எப்.எக்ஸ் (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) காட்சிகளும் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.

இந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமா உலகில் அறிமுகமாகி இந்தி சினிமா உலகிலும் டாப் ஹீரோயினாக இருந்தார். இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீதேவி ‘மாம்‘ என்ற படத்தில் 2017-ம் ஆண்டு நடித்தார். இந்த படம் ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கையில் 300-வது படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி இறந்தார். அவர் இறந்த பின் 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசியவிருது மாம் படத்திற்காக ஸ்ரீ தேவிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றி பெற்ற மாம் திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. வரும் 22-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். #2Point0 #Rajinikanth #MOM #Sridevi
காலா படத்தை தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு என இரண்டையும் கவனித்து வரும் பா.இரஞ்சித், அடுத்ததாக பாலிவுட் இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்திருக்கிறார். #BRAmbedkarNowandThen #PaRanjith
அடுத்த படம் பற்றிய அறிவிப்பை பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் ரஞ்சித் கூட்டணி அமைத்துள்ளார். கிரவுட் பண்டிங் மூலம் நிதி திரட்டி இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக 60 நாட்களில் சுமார் ரூ.60 லட்சத்தை திரட்ட இரு இயக்குநர்களும் முயற்சித்து வருகின்றனர். இப்படம் வரலாறு படைக்கும் எனவும், இப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Announcing @officialneelam next collaboration - with @jyotinisha for her directorual debut “B R Ambedkar Now and Then' - this film will make history! Very excited to work on this. Jai Bhim! pic.twitter.com/3JrnRMVRQ2
— pa.ranjith (@beemji) March 3, 2019
இதுகுறித்து பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். #BRAmbedkarNowandThen #PaRanjith
பாபா பாஸ்கர் இயக்கத்தில் `குப்பத்து ராஜா', விஜய் இயக்கத்தில் `வாட்ச்மேன்' என ஜி.வி.பிரகாஷ் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீசாக இருக்கின்றன. #WatchMan #GVPrakashKumar
சர்வம் தாள மயம் படத்தில் நடித்த ஜி.வி.பிரகாசுக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக 100 பெர்சண்ட் காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
இதில் பாபா பாஸ்கர் இயக்கியிருக்கும் `குப்பத்து ராஜா' வருகிற ஏப்ரல் 5-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜய் இயக்கியிருக்கும் `வாட்ச்மேன்' படம் ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜி.வி.பிரகாஷின் இரு படங்கள் அடுத்தடுத்த வாரத்தில் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். ராஜ் அருண், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா, சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர். #WatchMan #GVPrakashKumar
காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #VijayDevarkonda #AnandAnnamalai
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு தமிழில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டு சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாகவும், இந்த படத்திற்காக தனது பயிற்சிகளை விஜய் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாளவிகா ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijayDevarkonda #AnandAnnamalai
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு கைதி என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaidhi #Karthi #LokeshKanagaraj
தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்திற்கு கைதி என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்படி, கைதி என்ற தலைப்பை படக்குழு உறுதி செய்துள்ளதாகவும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகி யாரும் கிடையாது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய படப்பிடிப்பையும் விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு, இந்த மாத இறுதிக்குள் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி இணையவிருக்கிறார். #Kaidhi #Karthi #LokeshKanagaraj
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில், அவருடன் 3வது முறையாக பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். #VijaySethupathi
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமல்ஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் புதிய படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். சுந்தரபாண்டியன், ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் சூரி. இவர்களுடன் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.
சாஹோ படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் நடிகர் பிரபாஸ் விமான நிலையத்தில் ஒரு ரசிகையிடம் கன்னத்தில் அடிவாங்கி இருக்கிறார். #Prabhas
பாகுபலி படத்திற்குப் பிறகு பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் நடிகர் பிரபாஸ். தற்போது இவரது நடிப்பில் ‘சாஹோ’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சாஹோ பட வேலை தொடர்பாக பிரபாஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருக்கிறார். விமான நிலையித்தில் அவரை பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் போட்டோ எடுத்த சந்தோஷத்தில் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு சென்றார்.

ரசிகை இப்படி ஆர்வக்கோளாறில் அறைவார் என்பதை பிரபாஸ் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கன்னத்தை தடவிவிட்டு சிரித்து சமாளித்தார் பிரபாஸ். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரஜினிகாந்த் பின் வாங்கவில்லை; தெளிவாக இருக்கிறார் என்று நடிகர் விவேக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். #Rajini #Rajinikanth #Vivek
கோவில்பட்டி அருகே குருமலையில் உள்ள 18-ம் படி கருப்பசாமி, அலங்கார ஈஸ்வரி தாயார் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபங்களை நடிகர் விவேக் திறந்து வைத்தார்.
பின்னர் விவேக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் அனைவரும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர். பொதுமக்கள் என்கிற சக்தி தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கலாம். ஆனால் முடிவு மக்கள் கையில் தான் இருக்கிறது.

ரஜினி பின்வாங்கவில்லை அவர் முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என சொன்னார். அதில் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரசியமாக இருக்கிறது. எல்லோரையும் போல நானும் மக்கள் முடிவை எதிர்பார்க்கிறேன்’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற ஈஷா நவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் ஆகியோர் நடனம் ஆடியிருக்கிறார்கள். #Isha #MahaShivratri
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 25-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி பியூஸ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நாகராஜன் எம்.பி., ஜனாதிபதியின் மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் ராணா, நடிகைகள் சுஹாசினி, இந்தி நடிகை சுகி சாவ்லா, தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் மாலை 4 மணியளவில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர். பின்னர் 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர். இரவில் மகா சிவராத்திரி விழாவின்போது சத்குரு நடனமாடிய போது தமன்னா, காஜல் அகர்வால் உள்பட நடிகர், நடிகைகள் மற்றும் அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நடனமாடினர். விழாவில் பாடகர்கள் கார்த்திக், ஹரிகரன் கலந்து கொண்டு பாடினர்.
ஜெகதீசன் சுப் இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Bakrid #Vikranth #Aalanguruvigalaa
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் முதல் பாடலை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் ‘ஆலங்குருவிகளா...’ என்ற பாடல் நாளை வெளியாக இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒங்கள போடணும் சார்’ படத்தின் போஸ்டரை ஆர்யா வெளியிட இருக்கிறார். #Arya #JithanRamesh
ஜித்தன் ரமேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இதில் இவருடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
ஸிக்மா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் உருவாகி இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கி வருகிறார்கள். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், மார்ச் 7ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார்.






