என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமிக்கு டேனி படக்குழுவினர் மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கி இருக்கிறார்கள். #Varalakshmi #Danny
சர்கார், சண்டக்கோழி-2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் முதன்மை வேடத்தில் நடிக்கும் டேனி படத்தை சந்தானமூர்த்தி இயக்குகிறார்.
படம் பற்றி அவர் அளித்த பேட்டியில் ‘இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் அமைந்த கதையாகும். வரலட்சுமி இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி. படத்தை பிஜி.முத்தையா தயாரிக்கிறார்.

வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி நடிக்கிறார்கள். தஞ்சை பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது வரலட்சுமியை அவர்கள் வீட்டு பெண் போல பழகினார்கள். அவர் தொடங்கிய சேவ் சக்தி அமைப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அவர் பெயருக்கு முன்னால் மக்கள் செல்வி என்ற டைட்டிலை பயன்படுத்தி இருக்கிறோம்’ என்றார். வரலட்சுமியின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
சிம்பு, ஹன்சிகா இருவருக்குமிடையே காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்திருக்கிறார்கள். #STR #Simbu #Hansika #Maha
‘மஹா’ படத்தில் ஹன்சிகாவின் புகை பிடிக்கும் படம் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்துகொண்டிருக்க படக்குழுவோ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறது. இப்போது சிம்புவும் ‘மஹா’ படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி வந்துள்ளது. ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து மிரட்ட இருக்கிறார்.
சிம்பு தற்போது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் உள்ள அதி நவீன ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பை துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். சிம்பு, ‘மஹா’ படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

`ஷோயப்’ எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். சென்னையிலிருந்து இயக்குனர் ஜமீல், படக்குழுவுடன் துருக்கிக்கு கிளம்ப, சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர். சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘மஹா’ படத்தில் சிம்பு, ஹன்சிகா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘பேய் மாமா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Vadivelu
சிலகாலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு ஒரு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வந்தது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம்.

இருவரும் ஏற்கனவே இணைந்த என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், வியாபாரி படங்களின் காமெடி பகுதிகள் இன்னும் பேசப்படுகின்றன என்பதால் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஹர்ஷவர்தன் இயக்கத்தில் ரித்திகா சிங் நடித்த ‘மீடூ’ படத்துக்கு தலைப்பு வழங்க தணிக்கை குழு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், படக்குழு நீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளது. #MeToo #RitikaSingh
பெண்கள் தாங்கள் பணிபுரியும் துறைகளில், அலுவலகங்களில், இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியில் கொண்டு வர தொடங்கப்பட்ட இயக்கம் மீடூ.
சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கம் இந்தியாவுக்கும் கடந்த ஆண்டு வந்தது. சினிமா பிரபலங்கள் மீது நடிகைகள், பாடகிகள், உதவி இயக்குனர்கள் என புகார்கள் பெருகின.
பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் மீ டூ என்ற திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.

‘இறுதிசுற்று’ படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 7 மாதங்களுக்கு முன்பே உருவான போதும் படத்தில் இடம் பெற்ற சில வசனங்கள் காரணமாக படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்தது.
அதன் பின் நடிகை கவுதமி தலைமையிலான மறு சீராய்வுக்குழுவுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த முறை படத்தின் தலைப்பு காரணமாக சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சஜித் குரேஷி கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். #MeToo #RitikaSingh
புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள், உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துமாறு மோடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார். #PulwamaAttack
பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் பற்றி தான் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.
உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன’ என்று அவர் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து டுவிட்டரில் நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது:-
மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.
புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள்.
பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள்’.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PulwamaAttack #PMModi #Siddharth
என் குடும்பத்தை கெடுத்த சப்-இன்ஸ்பெக்டர், இன்னொரு குடும்பத்தை கெடுக்காத அளவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீசில் தாடி பாலாஜி கூறினார். #ThadiBalaji #Nithya
நடிகர் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
“உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. எனது குடும்ப வாழ்க்கையில் புகுந்து பிரச்சினைகளை உருவாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது இந்த நடவடிக்கை போதாது. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்தை கெடுத்த அவருடைய நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர் இன்னொரு குடும்பத்தை இனிமேல் கெடுக்காத அளவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொள்கிறேன்.

எனது மனைவியுடன் உள்ள பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக்கொள்வேன். எனது மகளை நன்றாக படிக்க வைக்க உதவி செய்வேன். எனது வீட்டில் தாக்குதல் நடத்தியதாக என் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் செலவழித்து கட்டிய வீட்டை நான் எப்படி சேதப்படுத்துவேன்.
சமூக வலைதளங்களை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சினிமா இல்லாவிட்டால், இந்த தாடி பாலாஜியை யாரும் மதிக்கமாட்டார்கள். சினிமாதான் என்னை இந்த அளவுக்கு வாழ வைத்துள்ளது”. இவ்வாறு அவர் கூறினார். #ThadiBalaji #Nithya
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith
‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஐதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர். தலைப்பு வைக்காத இப்படத்திற்கு தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #Nerkondaparvai
சர்கார் படத்தில் நடித்த விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். #Vijay #ThalapathyVijay #Sarkar
விஜய் நடிப்பில் இறுதியாக ‘சர்கார்’ திரைப்படம் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஒரு திருமண விழாவிற்காக நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் அகியோர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் இயக்குனர் அட்லியும் இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், நாஞ்சில் சம்பத், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
90 எம்.எல் படத்தில் நடித்ததற்காக நடிகை ஓவியா கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Oviya #90ML
ஓவியா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘90 எம்.எல்’. அனிதா உதூப் இயக்கத்தில் வெளியான இப்படம் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில், தற்போது எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், 90 எம்.எல் படத்தின் இயக்குனர் நடிகை ஓவியா, மற்றும் படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

‘பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், குழந்தைகளை சீரழிக்கும் வகையிலும் இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இருக்கிறது என்றும் புகார் கூறியுள்ளனர்.
மீ டூ கதைகளை படமாக்கும் தனுஸ்ரீதத்தாவின் நடவடிக்கையால் இந்தி பட உலகில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #MeToo
இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ‘மீ டூ’வில் சிக்கி பட உலகை அதிர வைத்தனர். வில்லன் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக் இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் மீ டூவில் சிக்கினர்.
நடிகை கங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் விகாஸ் பாஹல் மீது பாலியல் புகார் கூறினார். மாதுரி தீட்சித், ஜுஹு சாவ்லா ஆகியோரை வைத்து ‘குலாப் கேங்’ படத்தை இயக்கிய சவுமிக் சென் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகை ஒருவர் கூறினார். தொடர்ந்து மூன்று பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.
பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் விருந்து நிகழ்ச்சியில், மதுவில் போதை பொருளை கலந்து தன்னை சீரழித்ததாக பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் மீடூ-வில் சொல்லப்பட்ட பாலியல் புகார்களை தனுஸ்ரீதத்தா குறும்படமாக எடுத்துள்ளார். இதற்கு ‘கார்டியன் ஏஞ்சல்’ என்று பெயரிட்டுள்ளார். “பட வாய்ப்பு தேடும் நடிகைகள் எப்படி பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன். இந்த குறும்படம் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார். இதனால் மீடூவில் சிக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யாவின் 38-வது படமாக உருவாகவிருக்கும் படத்தில் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற பிரபலம் குனீத் மோங்கா இணைந்துள்ளார். #Suriya38
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.
Congratulations @guneetm, on your Academy Awards! We are proud to be associated with you for #Suriya38! pic.twitter.com/Vj7P6pGZPF
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 2, 2019
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் குனீத் மோங்கா இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் சமீபத்தில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Suriya38 #SudhaKongara #GuneetMonga
வடிவுடையான் இயக்கத்தில் பரத் - நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `பொட்டு' படம் 1000 திரையரங்குகளில் ரிலீசாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Pottu #Bharath
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `பொட்டு'. வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் பேசும் போது,
பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார்.
இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார். #Pottu #Bharath #Namitha #Iniya #SrustiDange






