என் மலர்
சினிமா

உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் என்று பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். #KRVijaya
தமிழ் சினிமா கதாநாயகிகளில் புன்னகை அரசி என்ற பெருமையை பெற்றவர் கே.ஆர்.விஜயா. சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “கோடீஸ்வரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன். மீண்டும் நடிப்பது பற்றி கே.ஆர்.விஜயா அளித்த பேட்டியில் ’பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

முன்பு பரபரப்பாக நடித்துவிட்டு இருந்ததால் அப்போதைய புகழை நினைச்சு சந்தோஷப்பட நேரம் இல்லை. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. என் கணவர் `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரை பற்றியும் கவலைப்படாதே. எப்போதும் பூ, பொட்டு வைத்துக்கொள். உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






