என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

மாமனிதன்
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாமனிதன்
இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்றுள்ளது மற்றும் ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
- இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

வாரிசு போஸ்டர்
இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாகவும் நேற்று வெளியான 'ரஞ்சிதமே' தெலுங்கு பாடல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Ranjithame from #Vaarasudu hits 1.5M+ views 💥
— Sri Venkateswara Creations (@SVC_official) December 1, 2022
▶️ https://t.co/fKhHvP9f7i#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @AnuragKulkarni_ @Manasimm @RamjoWrites @PVPCinema #BhushanKumar #KrishanKumar #ShivChanana @TSeries pic.twitter.com/T0c3a3bLQZ
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
- இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் 'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று (01.12.2022) படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் 'புஷ்பா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 53-வது நாட்களை நெருங்கியுள்ளது.
- இதில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 53-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் அசீமுக்கும் அமுதவாணனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதில் அசீம் உனக்கு அவ்வளவு நெஞ்சு உறப்பு இருந்தா அடி.. உனக்கு தைரியம் இருந்தால் அடி என அமுதவாணனின் முகத்திற்கு அருகே கை வைத்து அசீம் கத்துகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. எலியன் - பழங்குடியினர் டாஸ்க் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'.
- இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

புதிய கெட்டப்பில் அஜித்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

குடும்பத்தினருடன் அஜித்
சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கோல்டு
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

கோல்டு
இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதல் வீடியோ பாடல் 'தன்னே.. தன்னே..' வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'கோல்டு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை லக்ஷ்மி.
- இவர் இறந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு ஆடியோ பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தேடி வந்த லக்ஷ்மி, சில நேரங்களில் சில மனிதர்கள், சீர்வரிசை, உனக்காக நான், தென்பாண்டி தமிழே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை லக்ஷ்மி. இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்திலும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் குணச்சித்திர படங்கள் ஏற்று நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

லக்ஷ்மி
இந்நிலையில் நடிகை லக்ஷ்மி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக லக்ஷ்மி ஆடியோ ஒன்றை வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். அதில், "நான் ரொம்ப நல்லாவே இருக்கேன். பிறந்து விட்டால் என்றாவது ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது.

லக்ஷ்மி
யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியை கிளப்பி விட்டது எனத் தெரியவில்லை. எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறிப்போய் போன் போட்டு காலையிலிருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும், திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர். என் மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும்போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.

ரஜினி - ஏ.ஆர்.ரகுமான்
இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ரஜினி- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரகுமான்
இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "இரண்டு அற்புதமான மனிதர்களின் சந்திப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது மிகப்பெரிய ஆசிர்வாதம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
When two amazing human beings meet and you happen to be the reason ..you are blessed and of course they are THE best! @arrahman sir @rajinikanth appa ! pic.twitter.com/8WC83GpV6E
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 30, 2022
- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
- குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் ரவீனா சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தி திரைத்துறையில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா தாண்டன். சின்னத்திரை தொடர்கள், நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள, ரவீனா கடந்த 22-ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு நடிகை ரவீனா வனத்துறை வாகனத்தில் சென்றார். அப்போது, வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்துள்ளார். அவருடன் சென்றவர்களும் புலியை புகைப்படம், வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை ரவீனா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

சுற்றுலா பயணிகளுக்கான பாதையில் இருந்து மாறி சென்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ள இடத்திற்கு நடிகை ரவீனா சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், புலிக்கு மிகவும் அருகில் சென்று அதற்கு இடையூறு அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நடிகை ரவீனா பயணித்த வனத்துறைக்கு சொந்தமான வாகன டிரைவர், அவருடன் பயணித்த வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் தான் பயணித்தது வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஜீப்பில் தான் என்றும் சுற்றுலா வழிதடத்தை விட்டு மாறி வேறு இடத்திற்கு எங்கும் செல்லவில்லை என்றும் ரவீனா விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ரவீனா மீண்டும் தனது சமூக வலைத்தளத்தில், "போருக்குத் தயார்" எனக் குறிப்பிட்டு வனப்பகுதியில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பலரும் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா.
- இவரின் பிறந்தநாளையொட்டி ரசிகர் ஒருவர் அவருக்கு சிறப்பு பரிசு கொடுத்துள்ளார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார். திரைத்துறைக்கு ரம்யா மீண்டும் மறுபிரவேசம் செய்து உள்ளார்.

ரம்யா
'உத்தர கன்னடா' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது 40-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடினார். அவர் வலைத்தளப் பக்கத்தில் 'தனக்கு 40 வயது ஆகிவிட்டதாகவும், 40 வயதை எட்டியோர் பட்டியலில் நானும் இடம்பெறுகிறேன்' என்றும் குறிப்பிட்டிருந்தார். ரம்யாவுக்கு திரை உலகினர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

ரம்யாவின் ரசிகர் வரைந்த ஓவியம்
இந்நிலையில் ரம்யாவின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர் ஒருவர் சுவரில் 35 அடி உயரத்திற்கு ரம்யாவின் உருவத்தை வரைந்து அவரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார். பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வருபவர் பாதல் நஞ்சுண்டசாமி. ஓவியரான இவர் நடிகை ரம்யாவின் தீவிர ரசிகர் ஆவார். சீட்டுக்கட்டுகளில் ஆர்ட்டின் ராணி கார்டு இருப்பது போல் ரம்யாவின் படத்தை வரைந்து, அவரது தலையில் கிரீடம் சூட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் நடிகை ரம்யாவின் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. அந்த படத்திற்கு அவர்கள் லைக் செய்து வருகின்றனர்.
- வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
- இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவுப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- இப்படம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா நேற்று விசாரணைக்கு ஆஜாரானார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது லைகர் திரைப்படம் தோல்வி அடைந்தது.

விஜய் தேவரகொண்டா
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசானது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்திருந்தார். லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.

விஜய் தேவரகொண்டா
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விஜய் தேவரகொண்டா
விசாரணைக்குப் பின் வெளியே வந்த விஜய் தேவரகொண்டா கூறியதாவது, "பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.






