என் மலர்

  நீங்கள் தேடியது "Liger"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
  • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

  பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


  லைகர்

  மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  இதையடுத்து, இப்படத்தின் பாடல் ஒன்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


  லைகர்

  இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பாடல் ஆகஸ்ட் 6-ந் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.
  • தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.

  தெலுங்கில் வந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் அவர் நடித்த டியர் காமரேட் படம் தமிழிலும் வந்தது. தற்போது இந்தியில் லைகர், தெலுங்கில் குஷி, ஜனகன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

   

  விஜய் தேவரகொண்டா

  விஜய் தேவரகொண்டா

  தன்னை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் விஜய்தேவரகொண்டா தனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும் போதையில் இருந்ததால் படப்பிடிப்பை ரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து விஜய்தேவரகொண்டா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்று நன்றாக குடித்து விட்டு வந்தேன். காலையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். போதை குறையாமலேயே எழுந்து படப்பிடிப்புக்கு சென்றேன். படத்தின் கதாபாத்திரத்துக்காகவும் குடிக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு போதை அதிமாகிவிட்டது. வசனம் சொல்ல மறந்து உளற ஆரம்பித்தேன். பைத்தியக்காரன்போல் சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
  • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

  பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச் சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

   

  'லைகர்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இயங்கும் மின்சார ரெயிலில் இருவரும் பயணித்து, 'லைகர்' படத்திற்கான புரமோஷனில் ஈடுபட்டனர்.

   

  ரெயிலின் இருக்கையில் அமர்ந்திருக்கும் அனன்யா பாண்டேவின் மடியில் விஜய் தேவரகொண்டா படுத்திருக்கும் புகைப்படத்தை அனன்யா பாண்டே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
  • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

  பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச் சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.


  இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தில் இருந்து ஒரு சிறிய வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகருடன் சண்டைப் போடுவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
  'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள்.

  தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. 

  விஜய் தேவரகொண்டா
  பூரி ஜெகன்நாத் - விஜய் தேவரகொண்டா

  இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
  ×