வீடியோ வெளியிட்ட விஜய் தேவரகொண்டா.. வைரலாக்கும் ரசிகர்கள்

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா
Published on

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச் சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தில் இருந்து ஒரு சிறிய வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com