என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன்.
    • இவர் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா போன்ற பலரின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து 'அன்பே சிவம்', 'கோகுலத்தில் சீதை', 'அரண்மனை காவலன்', 'பகவதி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து விநியோகமும் செய்துள்ளார்.


    கே.முரளிதரன்

    இறுதியாக இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தை தயாரித்திருந்தார். அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்த முரளிதரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பல வெற்றிப்படங்களைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைந்துவிட்டார். அன்பே சிவம் நாட்களை நினைத்துக்கொள்கிறேன். அஞ்சலி" என்று பதிவிட்டுள்ளார்.



    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
    • கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அரசியல் தலைவர்கள் வாழ்க்கை சினிமா படங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே படங்களாக வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது வாழ்க்கையை படமாக்க கட்சியினருக்கு விருப்பம் உள்ளது. ஆனால் அதில் நான் நடிக்கவில்லை" என்றார்.

     

    சித்தராமையா 

    சித்தராமையா 

    இந்நிலையில் சித்தராமையா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையா வாழ்க்கை படத்தை வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரைக்கு கொண்டு வந்தால் வெற்றிபெற வாய்ப்பாக அமையும் என்று கட்சியினர் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

    சித்தராமையா அரசியலில் சில கட்சிகளில் இணைந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக ஆட்சி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்காக படக்குழுவினர் சவுதி அரேபியா சென்று படப்பிடிப்பு நடத்தினர்.

    இந்தி நடிகர் ஷாருக்கான் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் சவுதி அரேபியா சென்று படப்பிடிப்பு நடத்தினர். சவுதி அரேபியாவில் இயற்கை எழில்கொஞ்சும் வீடியோவை சமூக ஊடகங்களில் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.

     

     

    அதில் சவுதி அரேபியாவில் படப்பிடிப்பை நடத்தியது திருப்திகரமாக உள்ளது. இதுபோன்ற அற்புதமான இடங்களையும், எல்லா இடங்களையும் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் ஷாருக்கான் மெக்கா சென்று உம்ரா செய்தார். மெக்கா சென்ற ஷாருக்கானுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர்.

     

    இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சவுதிஅரேபியாவில் கலாச்சார அமைச்சகத்தின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மற்றும் அவர் மெக்காவில் உம்ரா செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
    • நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    நடிகர் அஜித், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சினிமா படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் தனது பைக் டூரை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் முடிந்தபிறகு ஏகே62 படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.




     


    எங்கும், எப்போதும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுக்கும் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்குமுன்பு தாடி மீசையுடன் சுற்றி வந்த அஜித் தற்போது முகசவரம் செய்து தாடி மீசை இல்லாமல் புதிய கெட்டப்பில் வலம் வந்த அவருடைய ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர்.

    • இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


    'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'கட்டா குஸ்தி' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'கட்டா குஸ்தி' படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


    விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி

    இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியதாவது, "இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த கதை கூறும் போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. அதனால் முடியாது என்று கூறிவிட்டேன். மூன்று வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் இந்த கதை வந்த போது இதை கண்டிப்பாக பண்ண முடியாது என்று நினைத்ததிலிருந்து முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. இந்த கதாபாத்திரம் நன்றாக இருந்தது கதாபாத்திரத்தை விட கதை மிகவும் நன்றாக இருந்தது. அதனால் இந்த கதையை ஒப்புக் கொண்டேன்" என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.




    • நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியா, முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
    • இவர் தன் கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

    நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், 'பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல, இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    முனீஸ் ராஜா - ஜீனத் பிரியா

    இந்நிலையில், தன் கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி. முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

    • நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
    • இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இதையடுத்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.



    • பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் அர்ஜுன் கபூரும் காதலித்து வருகின்றனர்.
    • மலைக்கா அரோரா திருமணம் செய்து கொள்ளாமல் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலின் மூலம் பிரபலமானார். இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.


    மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

    மலைக்கா அரோரா சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு இவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். தற்போது நடிகர் அர்ஜூன் கபூரை காதலித்து வரும் மலைக்கா அரோரா அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.


    மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

    50 வயதை நெருங்கிவிட்ட மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயதை பொருட்படுத்தாமல் காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவியது. அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.


    மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

    இதனால் கோபமடைந்த மலைக்கா அரோரா தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடி இருந்தார். மேலும், அர்ஜுன் கபூரும் இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிரபல பாலிவுட் செய்தி வெப்சைட் ஒன்றின் செய்தியைக் குறிப்பிட்டு "நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து சென்றிருக்கிறீர்கள். குப்பைச் செய்தியை சர்வசாதாரணமாக நேர்மையற்ற முறையில் வெளியிட்டு இருக்கிறீர்கள். இது போன்ற செய்தியை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    அர்ஜுன் கபூர் பதிவு

    இந்நிலையில், இவர் மீண்டும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், " கர்மா எல்லோரையும் பின்தொடர்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களை ஏமாற்றி விட்டு அதில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது, நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. சுற்றி நடப்பதே சுற்றி வருகிறது. விரைவில் நீங்கள் செய்த செயலுக்கானப் பலனைத் திருப்பித் தந்துவிடும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன்.
    • இவர் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா போன்ற பலரின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து 'அன்பே சிவம்', 'கோகுலத்தில் சீதை', 'அரண்மனை காவலன்', 'பகவதி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து விநியோகமும் செய்துள்ளார்.

    இறுதியாக இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தை தயாரித்திருந்தார். அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்த முரளிதரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். இது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

    • இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    நாய் சேகர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடிவேலுவின் வழக்கமான காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    நாய் சேகர்

    'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




    • விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

     

    மாமனிதன்

    மாமனிதன்

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

     

    மாமனிதன்

    மாமனிதன்

    இந்நிலையில் மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்றுள்ளது மற்றும் ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.


    வாரிசு போஸ்டர்

    இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாகவும் நேற்று வெளியான 'ரஞ்சிதமே' தெலுங்கு பாடல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×