ராஜ்கிரண் மகள் கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜர்

நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியா, முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார்.இவர் தன் கணவருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
ஜீனத் பிரியா - முனீஸ் ராஜா
ஜீனத் பிரியா - முனீஸ் ராஜா
Published on

நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், 'பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல, இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

முனீஸ் ராஜா - ஜீனத் பிரியா

இந்நிலையில், தன் கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி. முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com