அன்பே சிவம் நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.. தயாரிப்பாளர் முரளிதரனுக்கு கமல் அஞ்சலி..

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன்.இவர் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா போன்ற பலரின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து 'அன்பே சிவம்', 'கோகுலத்தில் சீதை', 'அரண்மனை காவலன்', 'பகவதி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து விநியோகமும் செய்துள்ளார்.

கே.முரளிதரன்

இறுதியாக இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தை தயாரித்திருந்தார். அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்த முரளிதரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பல வெற்றிப்படங்களைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைந்துவிட்டார். அன்பே சிவம் நாட்களை நினைத்துக்கொள்கிறேன். அஞ்சலி" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com