என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், இப்படத்தின் பூஜை வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் 'விக்ரம்' படத்தை போன்றே தளபதி 67-ம் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கை படக்குழு அணுகியதாகவும் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    • வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி வைரவன்.
    • இவர் இன்று அதிகாலை காலமானார்.

    வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.


    ஹரி வைரவன்

    இந்நிலையில், இன்று அதிகாலை 12.15 மணியளவில் இவர் காலமானார். இவருடைய இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

    ஹரி வைரவன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
    • இதில் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

    சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.


    பிரக்ஞானந்தா

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருதும், 4 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 4 பேருக்கு தியான்சந்த் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.


    இளவேனில் வாலறிவன்

    இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.


    சூர்யா

    இதைத் தொடர்ந்து செஸ் வீரர் பிரக்ஞானந்தாவும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனும் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



    • நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்ததை அடுத்து நான்காவது வில்லனாக இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.


    கார்த்திக்

    இந்நிலையில், தளபதி 67 படத்தில் நடிக்க 80-களின் பிரபலமான நடிகர் கார்த்திக்கை படக்குழு அணுகியதாகவும் ஆனால் அவர் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கே.டி என்கிற கருப்புதுரை’.
    • இப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு தேசிய விருது கிடைத்தது.

    2019-ஆம் ஆண்டு மதுமிதா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கே.டி என்கிற கருப்புதுரை'. மு.ராமசாமி , நாக விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து பல விருதுகளையும் வென்றது.


    கே.டி என்கிற கருப்புதுரை

    மேலும் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நாக விஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 'கே.டி என்கிற கருப்புதுரை' படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மு.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


    கே.டி என்கிற கருப்புதுரை

    இப்படத்தை நிகில் அத்வானி தயாரிப்பதாகவும் தமிழில் இயக்கிய மதுமிதாவே இந்தியிலும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதையில் மதுமிதா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.

    தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன்

    இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.


    ரத்தம்

    இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரத்தம்' திரைப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.



    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’.
    • இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.


    வாரிசு போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாரிசு' படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 நபர்கள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 54-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் "ஒரு மனிதன் பேசிக்கொண்டு இருக்கும் போது கை வைத்தது ரொம்ப பெரிய தவறு. அவர் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்று அசீம் மீது விக்ரமன் குற்றம்சாட்டுகிறார். இதற்கு ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளரை பேசினால் நாம் கவனம் பெறுவோம் என்று நீங்கள் பேசும் போது நான் ஸ்ட்ராங்கான போட்டியாளராக என்னை நானே நினைத்துக் கொள்கிறேன் என்று அசீம் கூறுகிறார்.


    பிக்பாஸ் சீசன் 6

    அசீம் சொன்னதைக் கேட்டு சிரிக்கும் விக்ரமன், உடனடியாக எழுந்து வந்து, என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு அட்டக்கத்தி தான் ஸ்ட்ராங் பிளேயர்லாம் கிடையாது என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • விக்ரம் வேதா, ஜெர்சி, கே13, மாறா உள்ளிட்ட பல டங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
    • இவர் தற்போது நடித்துள்ள “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

    விக்ரம் வேதா, ஜெர்சி, கே13, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் தீபக் இயக்கியுள்ள "விட்னஸ்" படத்தில் நடித்துள்ளார். மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

     

    விட்னஸ்

    விட்னஸ்

    இதில் ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தை "தி பீப்பிள் மீடியா பேக்டரி" சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தின் இசையை ரமேஷ் தமிழ்மணி கவனிக்க, கபிலன் பாடல்களை எழுதியுள்ளார்.

     

    விட்னஸ்

    விட்னஸ்

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி இப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது.  

    • தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன்.
    • இவர் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா போன்ற பலரின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து 'அன்பே சிவம்', 'கோகுலத்தில் சீதை', 'அரண்மனை காவலன்', 'பகவதி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து விநியோகமும் செய்துள்ளார்.


    முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் பதிவு

    இறுதியாக இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தை தயாரித்திருந்தார். அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்த முரளிதரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘வதந்தி’ வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
    • இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.


    வதந்தி

    இதைத்தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கும் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார். ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    எஸ்.ஜே. சூர்யா

    இந்நிலையில், 'வதந்தி' புரோமோஷன் பணிகளின் போது நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் ஆர்சி 15 படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர் ஆர்சி 15 பற்றி சொல்ல எனக்கு அனுமதி இல்லை எனவும் இயக்குனர் ஷங்கர் படத்தை முடிக்கும் வரை விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், ஆர்சி 15-ல் என் பங்கு பற்றி நான் பேசுவது கூட, தயாரிப்பாளர்கள் நான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் தான் என தெரிவித்துள்ளார்.

    • பகவதி, சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமணன், கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஜெய்.
    • இவர் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனருடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    பகவதி, சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமணன், கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஜெய். இவர் நடித்து எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்தது. இவர் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

     

    அருண்ராஜா காமராஜ் - சிவகார்த்திகேயன்

    அருண்ராஜா காமராஜ் - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில் ஜெய் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தையும், உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×