சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைந்த ஜெய்?

பகவதி, சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமணன், கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஜெய்.இவர் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனருடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்
ஜெய்
Published on

பகவதி, சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமணன், கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஜெய். இவர் நடித்து எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்தது. இவர் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அருண்ராஜா காமராஜ் - சிவகார்த்திகேயன்
அருண்ராஜா காமராஜ் - சிவகார்த்திகேயன்

அருண்ராஜா காமராஜ் - சிவகார்த்திகேயன்

இந்நிலையில் ஜெய் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தையும், உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com