ஸ்ட்ராங் பிளேயர் இல்ல நீ ஒரு அட்டக்கத்தி.. அனல் பறக்கும் பிக்பாஸ் வீடு..

பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 நபர்கள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6
Published on

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 54-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6

இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் "ஒரு மனிதன் பேசிக்கொண்டு இருக்கும் போது கை வைத்தது ரொம்ப பெரிய தவறு. அவர் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்று அசீம் மீது விக்ரமன் குற்றம்சாட்டுகிறார். இதற்கு ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளரை பேசினால் நாம் கவனம் பெறுவோம் என்று நீங்கள் பேசும் போது நான் ஸ்ட்ராங்கான போட்டியாளராக என்னை நானே நினைத்துக் கொள்கிறேன் என்று அசீம் கூறுகிறார்.

பிக்பாஸ் சீசன் 6

அசீம் சொன்னதைக் கேட்டு சிரிக்கும் விக்ரமன், உடனடியாக எழுந்து வந்து, என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு அட்டக்கத்தி தான் ஸ்ட்ராங் பிளேயர்லாம் கிடையாது என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com