என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
- இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வருகின்றன.
தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார். இவர்கள் திருமணம், 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நாளை (டிசம்பர்) 4-ந் தேதி நடக்க உள்ளது.

ஹன்சிகா - சோகைல் கதுரியா
இதனையொட்டி 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

ஹன்சிகா - சோகைல் கதுரியா
இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது துவங்கி உள்ள நிலையில், இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. ஹன்சிகா மணமகள் கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.
- தெருக்குரல் அறிவின் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருந்தது.
- இவர் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.
2018-ஆம் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. தொடர்ந்து வட சென்னை, நட்பே துணை, ஜிப்சி போன்ற பல படங்களில் பாடல்கள் எழுதி பாடியும் உள்ளார்.

தெருக்குரல் அறிவு
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் இவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருந்து. இந்த பாடல் மூலம் இவர் பலரது கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.

தெருக்குரல் அறிவு பதிவு
இந்நிலையில், தெருக்குரல் அறிவு, தற்போது தான் காதலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்பவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கல்பனா அம்பேத்கர்
பா. இரஞ்சித் தயாரிப்பில் வெளியான மக்கள் இசை நிகழ்ச்சியில் கல்பனா அம்பேத்கர் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'டி.எஸ்.பி'.
- இப்படம் நேற்று (02.12.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் 'டி.எஸ்.பி'. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹரி வைரவன் இன்று காலமானார்.
- இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இன்று அதிகாலை 12.௧௫ மணியளவில் இவர் காலமானார். இவருடைய இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஹரி வைரவன்
இந்நிலையில், நடிகர் ஹரி வைரவன் மறைவு குறித்து சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஹரி வைரவன்
ஹரி வைரவன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தார் க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி #ActorVairavan pic.twitter.com/ulBY4H5TLR
— Actor Soori (@sooriofficial) December 3, 2022
- விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
- இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது.

கட்டா குஸ்தி
'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது, "இந்த படம் ரொம்ப கிராமத்திற்குள் சென்று எடுத்தது அல்ல. ஒரு ஊரில் நடக்கும் கதை தான்.

விஷ்ணு விஷால்
அந்த ஊருக்கு எங்கு எங்கு முக்கியமான இடம் இருக்கிறதோ அந்த லோக்கேஷனில் தான் ஷூட் செய்திருக்கிறோம். கிராம மக்களோடு ஒன்றாகி இருப்பது அந்த மாதிரியான படம் இல்லை. இந்த படத்தை பார்த்தால் தெரியும். 'வெண்ணிலா கபடி குழுவில்' ஊரோடு ஒன்றாக சேர்ந்து விட்டோம். எந்த வீடு பக்கத்தில் இருக்கிறதோ அந்த வீட்டில் போய் சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் இதில் அப்படி இல்லை" என்று பேசினார்.
- ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
- பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015 ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

திஷா பதானி
இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

திஷா பதானி
நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லவ் டுடே'.
- இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லவ் டுடே
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுது. மேலும், இப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

லவ் டுடே
இந்நிலையில், இயக்குனர் அட்லீ 'லவ் டுடே' படத்தை பார்த்து படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "லவ் டுடே படம் ஒரு ஜாலி கலந்த பயணம். பிரதீப் ரங்கநாதன் மாஸ் ப்ரோ, கலக்கிட்டீங்க" எனக் குறிப்பிட்டு படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.

அட்லீ
இதற்கு பதிலளித்துள்ள பிரதீப் ரங்கநாதன், "மிக்க நன்றி அட்லீ அண்ணா, என்னை ஊக்குவிக்கும் ஒருவரிடம் இருந்து பாராட்டு பெறுவது அர்த்தமுடையதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Thankyou so much brother @Atlee_dir ☺️ Means a lot when it comes from a person who inspires me for pushing boundaries . https://t.co/y6FDBIBphe
— Pradeep Ranganathan (@pradeeponelife) December 3, 2022
- நடிகர் ஜீவா தற்போது நடித்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம்.
- இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜீவா
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. வரலாறு முக்கியம் திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜீவா
இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ஜீவா கூறியதாவது, "சினிமாவை ரசிகர்கள் எண்டர்டெயின்மெண்டாக தான் பார்க்க வேண்டும். சினிமாவில் எதுவும் நிஜம் இல்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ரசிகர்கள் சினிமாவை பார்த்து உத்வேகமாக வேண்டுமே தவிர விபரீத முடிவை எடுக்கக் கூடாது என்று" கூறினார்.
- நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
- சமந்தாவை தொடர்ந்து நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். ஸ்டூடியோவிலும் குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் பேசிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்தி உள்ளனர்.

பூனம் கவுர்
இந்த நிலையில் நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பூனம் கவுர் தமிழில் 2007-ல் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பூனம் கவுர்
பூனம் கவுரை தாக்கியுள்ள நோயால் சோர்வு, தூக்கம், மன நிலை பிரச்சினைகள் ஏற்படும் என்றும், வாழ்நாள் முழுவதும் இந்த நோய் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது பூனம் கவுர் உடல் வலியால் அவதிப்படுவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
- மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல என கருத்து.
- கருத்து குறித்து இஸ்ரேலிய திரைப்பட இயக்குனர் நாடவ் லேபிட் விளக்கம்.
53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. இத்திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

நாடவ் லேபிட்
அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளும் ஆதரவும் தெரிவித்தனர். மேலும், இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடாவ் லேபிட் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தும் பிறகு மன்னிப்பு கேட்டும் இருந்தார்.
இந்நிலையில், நடாவ் லேபிட் இந்த சர்ச்சை தொடர்பாக பேசியதாவது, "நான் யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவமதிக்கவும் நினைக்கவில்லை. என் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது. நான் அங்கு பேசியது என் கருத்து மட்டுமல்ல. உடன் இருந்த நடுவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிப்பதாகவே நான் பேசினேன்.‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் பிரசார தன்மை கொண்டதாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சொல்வேன்" என்று பேசினார்.
- விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில், இப்படத்தின் பூஜை வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் 'விக்ரம்' படத்தை போன்றே தளபதி 67-ம் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கை படக்குழு அணுகியதாகவும் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி வைரவன்.
- இவர் இன்று அதிகாலை காலமானார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

ஹரி வைரவன்
இந்நிலையில், இன்று அதிகாலை 12.15 மணியளவில் இவர் காலமானார். இவருடைய இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஹரி வைரவன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






