என் மலர்
சினிமா செய்திகள்
- வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
- 'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தீ தளபதி பாடல் அறிவிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு படத்தின் 2வது பாடல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி (இன்று) வெளியாகும் எனவும், இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக போஸ்டர் வெயிட்டு படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள தீ தளபதி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தீ தளபதி பேரகேட்ட விசில் அடி என்று தொடங்கும் இந்த பாடல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
- சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து வருகிறார்.
- ‘ரத்தம்’ திரைப்படத்தின் டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிமாறன் - பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு
இந்த படத்தின் டீசர் வரும் 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முன்னனி இயக்குனர்களான வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 'ரத்தம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- விஷ்ணு விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
- இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

கட்டா குஸ்தி
இந்நிலையில் காமெடி, ஆக்ஷன், எமோஷ்னல் என அனைத்தையும் உள்ளடக்கிய படமாக திரையரங்குகளில் வெளியான கட்டா குஸ்தி குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள், நகைச்சுவை பிரியர்கள் என பலரையும் கவர்ந்து வெற்றிநடை போடுகிறது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'.
- இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

புதிய கெட்டப்பில் அஜித்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள்
சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.
- இப்படம் தற்போது புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா
மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பாபா படத்திற்காக டப்பிங் பணியில் ஈடுபட்ட ரஜினி
இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த புதிய டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஒரு படம். பாபா ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியாகிறது என்று பதிவிட்டுள்ளார்.
- வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
- ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சிம்பு பாடிய தீ தளபதி பாடல் அறிவிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு படத்தின் புதிய போஸ்டர்
வாரிசு படத்தின் 2வது பாடல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி (இன்று) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக போஸ்டர் வெயிட்டு படக்குழு தெரிவித்திருந்தது. 2-வது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய் மாஸ் லுக்கில் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’.
- இப்படத்தின் இரண்டாம் பாடலான தீ தளபதி பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய் - வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

இப்படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
- துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா.
- சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

சூரரைப் போற்று
இப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

சுதா கொங்கரா - சூர்யா
சில தினங்களாக பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா திரைப்படமாக இயக்கவுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திரு. ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகர். ஆனால், அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த படத்தின் மீதுள்ள உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! விரைவில்! என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலமாக சுதா கொங்கராவுக்கு ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என தெளிவாகியுள்ளது.
- பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
- பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவர் நைட்டில பாப்புலர் ஆனார். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவித் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் விதவிதமான உடையில் மொபைல் போன், டேப் டிரெஸ், ஒயின் கிளாஸ் என புகைப்படங்களை பதிவிடுவார்.

உர்பி ஜாவித்
இந்நிலையில், தற்போது எந்தவொரு ஆடையும் அணியாமல் கவர்ச்சியில் வெறும் சிகப்பு நிற டேப்களை தாறுமாறாக சுவற்றுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டு இருக்கும் புதிய வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஆடை வடிவமைப்புக்காக சன்னி லியோன் உர்பி ஜாவித்தை பாராட்டி உள்ளார். உர்பி உங்களின் ஆடை அற்புதமானது மற்றும் கடற்கரை உடைகள் உங்களுக்கு முற்றிலும் சரியானது. உங்களின் உடைகளை நான் விரும்புகிறேன், இது அழகாக இருக்கிறது என கூறினார்.

உர்பி ஜாவித்
இதற்கு பதில் அளித்த உர்பி எனது தனித்துவமான ஆடை உணர்விற்காக நான் அறியப்பட்டவள். நீங்கள் என்னுடன் போட்டியிடலாம், ஆனால் எனது ஆடையுடன் நீங்கள் போட்டியிட முடியாது, ஏனெனில் அது எப்போதும் யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது என கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
- விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சியாளர் உயிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

விடுதலை
இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்
இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்று வந்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார்.
- ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர்.
- இப்படத்திற்காக இயக்குனர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர்
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ராஜமௌலி
இந்நிலையில் சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் ஃப்பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது, ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக இயக்குனர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. அவருடன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அர்னோஃப்ப்ஸ்கை, சாரா போலி, ஜினா பிரின்ஸ் பிளைத்வுட் போன்ற பிரபல இயக்குனர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த விருது ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. மேலும் ரோலிங் ஸ்டோன் மாத இதழின் 2022-ம் ஆண்டு சிறந்த 22 படங்களில் ராஜமௌயின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 12-வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர். உள்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.
- இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வீர சிம்ஹா ரெட்டி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீர சிம்ஹா ரெட்டி
அதன்படி, 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
This Sankranthi gets MASSive with the arrival of the GOD OF MASSES ❤️🔥#VeeraSimhaReddy Grand Worldwide Release on 12th January, 2023 🔥#NandamuriBalakrishna @megopichand @shrutihaasan @OfficialViji @varusarath5 @MusicThaman @SonyMusicSouth pic.twitter.com/4BCS7twjz6
— Mythri Movie Makers (@MythriOfficial) December 3, 2022






