'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
வீர சிம்ஹா ரெட்டி
வீர சிம்ஹா ரெட்டி
Published on: 

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வீர சிம்ஹா ரெட்டி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீர சிம்ஹா ரெட்டி

அதன்படி, 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com