என் மலர்

    சினிமா செய்திகள்

    வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை பாடியவர் இவரா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
    X

    விஜய் - வாரிசு

    வாரிசு படத்தின் 'தீ தளபதி' பாடலை பாடியவர் இவரா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’.
    • இப்படத்தின் இரண்டாம் பாடலான தீ தளபதி பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    விஜய் - வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

    தீ தளபதி பாடலின் அறிவிப்பு

    இப்படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

    Next Story
    ×