ராஜமௌலிக்கு கிடைத்த விருது.. குவியும் வாழ்த்துக்கள்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர்.இப்படத்திற்காக இயக்குனர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது.
ராஜமௌலி
ராஜமௌலி
Published on

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர்
ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ராஜமௌலி
ராஜமௌலி

ராஜமௌலி

இந்நிலையில் சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் ஃப்பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது, ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக இயக்குனர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. அவருடன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அர்னோஃப்ப்ஸ்கை, சாரா போலி, ஜினா பிரின்ஸ் பிளைத்வுட் போன்ற பிரபல இயக்குனர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த விருது ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. மேலும் ரோலிங் ஸ்டோன் மாத இதழின் 2022-ம் ஆண்டு சிறந்த 22 படங்களில் ராஜமௌயின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 12-வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர். உள்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com