என் மலர்
சினிமா செய்திகள்
- வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
- 'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தீ தளபதி
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

தீ தளபதி
வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் நேற்று வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
- இது தொடர்பான சூர்யாவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சூர்யா தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

சூர்யா - பாலா
இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

வணங்கான்
எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலாவின் இந்த அறிக்கைக்கு சூர்யாவின் 2டி நிறுவனம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளது.
பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து @Suriya_offl அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். 🙏🏼 #Vanangaan pic.twitter.com/8jgJJtXyWI
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 4, 2022
- வாரிசு படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், 'ரஞ்சிதமே' மற்றும் சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
இப்படத்தைத் தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகவும், சஞ்சய் தத், பிரித்விராஜ் உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில் 'தளபதி 67' படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளதாகவும் இந்தப் பூஜையில் விஜய், லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
- இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

பார்த்திபன்
இந்நிலையில் பார்த்திபன் விமர்சனங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது. அதில், அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கிவிட்டு சமைப்போம், அப்படி சமூக வளைத்தளங்களிலும் சில (முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்தபடி) அருவருப்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது ஒதுக்கிவிடுகிறேன் நான். அவர்களுக்கு "பிடிக்கவில்லை" என்ற கருத்தை வரவேற்கிறேன். ஆனால் அதை கெட்ட வார்த்தைகளால் எழுதும்போதுதான் மனம் வலிக்கிறது. என் வளர்ச்சிக்காக, முழுமனதாக, அழகாக, கவிதையாக, வாழ்த்துவதாக எழுதும் பல நல்ல உள்ளங்கள் அதை (கேடுகெட்ட negativity) எப்படி தவிர்க்கிறீர்கள்/தவிக்கிறீர்கள் என்பதை நினைக்கவே மனம் கூசுகிறது! என்று பதிவிட்டுள்ளார்.
அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கிவிட்டு சமைப்போம்,அப்படி சமூக வளைத்தளங்களிலும் சில -……… (முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்தபடி)அருவருப்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது ஒதுக்கிவிடுகிறேன் நான். அவர்களுக்கு "பிடிக்கவில்லை"என்ற கருத்தை வரவேற்கிறேன்.ஆனால் அதை கெட்ட conti… pic.twitter.com/lWUPLUav3H
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 4, 2022
- ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
- இவர் படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் கைவசம் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி படங்கள் உள்ளன.

படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை சுட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரசிகர்கள் எனக்கு ஒரு தோசை பார்சல் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
- வெண்ணிலா கபடி குழு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹரி வைரவன் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.
- மறைந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தைகளின் கல்விச் செலவை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 12.15 மணியளவில் இவர் காலமானார். இவருடைய இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும் இவருடைய குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், மறைந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தையின் கல்விச் செலவை தான் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ஹரி வைரவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். கடைசி ஆறு மாதங்களாக அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். இது வெளிய யாருக்கும் தெரியாது. என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை கடந்த ஆறு மாதங்களாக நான் செய்தேன்.

அவரது மனைவியிடமும் பேசினேன். என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். வைரவன் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் உள்ளது. என்ன எப்பவும் மாப்ளனு தான் கூப்பிடுவாரு. அந்த மெசேஜில் தேங்க் யூ மாப்ள, நீ எனக்கு உதவி செய்றது ரொம்ப சந்தோஷம் என சொல்லி இருந்தார்" என்று விஷ்ணு விஷால் கூறினார்.
- ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.
- இப்படம் தற்போது புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

பாபா
மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்த்
இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நேற்று பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

பாபா
பாபா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பாபா படத்தில் மட்டும்தான் புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ளதா? மற்றவை எல்லாம் புத்தர் பற்றிய படங்களா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் சமூதாய பொறுப்புள்ளவர் என்றும் அன்புமணி பாராட்டியுள்ளார்.
- தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர்.
- தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், யானை, மாபியா, ஓமணப்பெண்ணே, மான்ஸ்டர், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களையும் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சென்னையில் தற்போது புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு மாலைபொழுதை கழித்தோம். அதன்படி இப்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். தனது நெற்றியில் காதலர் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவருக்கு வலைத்தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டு வருகின்றன.
- வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
- இது நடிகர் சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:
வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
- நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'டி.எஸ்.பி'.
- இப்படம் நேற்று முன்தினம் (02.12.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் 'டி.எஸ்.பி'. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

டி.எஸ்.பி
இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பலதரப்பட்ட மக்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதியின் ரசிகர்கள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது.
- இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி விமர்சனத்துக்கு உள்ளானார். பலரும் அவரை கேலி மற்றும் அவதூறு செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.

ஊர்வசி ரவுத்தலா - ரிஷப் பண்ட்
இதற்கு ஊர்வசி ரவுத்தலா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''ஆர்பி என்று ராம் பொத்தினேனியை நான் குறிப்பிட்டேன். ஆனால் ரிஷப் பண்டை தான் அப்படி அழைத்தேன் என்று பலரும் யூகமான வதந்திகளை பரப்பி என்னை கேலி செய்கிறார்கள். எதையும் முழுமையாக விசாரிக்காமல் நம்பிவிடும் போக்கு சரியல்ல. கிரிக்கெட் வீரர்களோடு நடிகர், நடிகைகளை ஒப்பிடுவது முறையல்ல. அவர்கள் நாட்டுக்காக விளையாடுவதால் மதிக்கப்படுகின்றனர்" என்றார்.
- நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
- இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வருகின்றன.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மருதாணி வைக்கப்பட்ட சிவந்த கைகளுடன் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.

அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. மணமகள் உடையில் உள்ள ஹன்சிகா, சோகைல் கதுரியாவுடன் நடந்து வந்தார். பின்னர் இசைக்கு ஏற்ப உற்சாகத்துடன் ஹன்சிகா நடனமாடினார்.
நேற்று மாலை போலோ போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை காண ஹன்சிகா, சோகைல் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்றனர். இருவரும் வெள்ளை நிற உடையில் பழமையான காரில் போலோ மைதா னத்துக்கு சென்றனர். பின்னர் இரவில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடக்கிறது. முன்னதாக இன்று காலை ஹல்தி விழா தொடங்கியது. இதில் மணமக்கள் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டனர்.






