என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரோப் கயிறு அறுந்து விழுந்த சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிர்ழிந்தார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

     

    விடுதலை

    விடுதலை

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

     

    விடுதலை

    விடுதலை

    இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சண்டை கலைஞர் சுரேஷ் 'விடுதலை' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப்பெரிய இழப்பு.

     

    பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

    பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

    இந்த சம்பவம் எங்களது இதயத்தில் மாறாத வலியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சண்டை கலைஞர் சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார்.

    தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

     

    சிவராஜ்குமார்

    சிவராஜ்குமார்

    அடுத்து தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுசும், சிவராஜ்குமாரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவராஜ்குமார் கூறும்போது, ''நான் தனுசின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து இருக்கிறேன். இப்போது தனுசுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

    ரஜினியின் ஜெயிலர் படத்திலும் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '18 பேஜஸ்'.
    • இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

    இயக்குனர் பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '18 பேஜஸ்'. இந்த படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு 'டைம் இவ்வா பிள்ளா' என்ற பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது.


    18 பேஜஸ்

    மேலும், இதன் முழுமையான பாடல் இன்று ( டிசம்பர் 5) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சிம்பு, "இது எளிதானது அல்ல. ஆனால் மதிப்புமிக்கது" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    சிம்பு

    சமீபத்தில் 'தி வாரியர்' திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய 'புல்லட்' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.




    • 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    வடிவேலு

    இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'நான் டீசென்டான ஆளு' பாடல் வெளியாகியுள்ளது. துரை வரிகளில் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.



    • இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இதில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

    நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது.


    ரத்தம்

    இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    • எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    துணிவு

    இந்நிலையில், 'துணிவு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'சில்லா சிலா' பாடல் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார்.
    • இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.

    தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


    இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மருதாணி வைக்கப்பட்ட சிவந்த கைகளுடன் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.


    அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது.


    இதையடுத்து ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் நேற்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பகாசூரன்'.
    • இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


    பகாசூரன்

    இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது




    • நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காலேஜ் ரோடு’.
    • இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கபாலி, பரியேறும் பெருமாள், வி1 போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'காலேஜ் ரோடு'. இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கும் இந்த படத்தில் மோனிகா, ஆனந்த்நாகு, அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


    காலேஜ் ரோடு

    எம்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆப்ரோ இசையமைக்கிறார். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது. அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? என்ற கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'காலேஜ் ரோடு'.


    காலேஜ் ரோடு

    இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'தீங்கிரை'.
    • இப்படத்தின் 'அவிழாத காலை' பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'தீங்கிரை'. இப்படத்தில் கதாநாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்துள்ளார்.

    தீங்கிரை

    சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய 'அவிழாத காலை' என்னும் ரொமான்டிக் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.




    • நடிகை கீர்த்தி சுரேஷ் 'தசரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.


    ரகு தாத்தா

    தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'தசரா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.


    ரகு தாத்தா படக்குழு

    'ரகு தாத்தா' படத்தின்  போஸ்டரை வெளியிட்டுள்ள ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் 'புரட்சி வீட்டில் இருந்து தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், படக்குழுவினருடன் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.



    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சில தினங்களுக்கு முன்பு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.
    • இவர் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார். சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

     

    சாமி தரிசனம் செய்ய வந்த இளையராஜா

    சாமி தரிசனம் செய்ய வந்த இளையராஜா

    இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×