என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ஜுனியர் எம்.ஜி.ஆர். புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றது.
அறிமுக இயக்குனர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ஜுனியர் எம்.ஜி.ஆர். முக்கிய கதாபாத்திரத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் கிரிஷா குரூப், ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் பூஜை
தேர்ட் ஐ கிரியேஷன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் ஜுனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குனர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி, இயக்குனர் தமிழ், பிக்பாஸ் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
புதுமையான க்ரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சினிமாப்பட விநியோகஸ்தர் மதுராஜ் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
- இவரது ஊழியர்கள் இரண்டு பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மதுராஜ். சினிமாப்பட விநியோகஸ்தர். விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த "ஷூ" என்கிற சினிமா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் ஆகியவற்றை ரூ.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மலேசியாவைச் சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டதாக தெரிகிறது இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

ஷூ
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த 13 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சீர் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கத்தி முனையில் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்கள் ஏ.டி.எம் கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.
பின்னர் அவர்களை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றுவிட்டனர். மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இதுபற்றி அறிந்த சினிமா வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கடத்தல் தொடர்பாக தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை இன்று அதிகாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘தங்கலான்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தங்கலான்
இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கலில் நடைபெற்றுள்ளது.

தங்கலான்
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து "இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு. கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.'பேக் அப்' என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன? அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்ததுதான் மிச்சம்" என்று பதிவிட்டுள்ளார்.
இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.'Pack-up' என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம். pic.twitter.com/6NCiU6ezGQ
— Vikram (@chiyaan) December 5, 2022
- பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் மாரி செல்வராஜ்.
- இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது.

மாமன்னன்
இதனை தொடர்ந்து நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை மாரி செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் நடத்தினார். கடந்த 4 நாட்களாக ஒரு சண்டைக்காட்சி உள்பட பல காட்சிகள் அந்த பகுதியில் படமாக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் சண்டையிடும் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பை ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர்.
மாரி செல்வராஜின் 4-வது படமான வாழை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன்.
- இவர் நடித்திருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மகள். ஸ்ருதிஹாசன் தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஸ்ருதிஹாசன்
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' படத்திலும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி விடுமுறை தினத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஸ்ருதிஹாசன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், 'தி ஐ' எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இந்த இரு படங்களின் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.

வாரிசு - துணிவு
இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

வாரிசு - துணிவு
அதில், "துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று விஜய்யிடம் சொன்ன போது வரட்டும் பா. நம்ம நண்பர் படம்தானே.. அதுவும் நல்லா போகட்டும்.. நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த கருத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘யசோதா’.
- இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யசோதா
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

யசோதா போஸ்டர்
மேலும், 'யசோதா' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
unravel this oh-so-mysterious trap with yashoda 👀#YashodaOnPrime, Dec 9#yashoda #yashodamovie @Samanthaprabhu2 pic.twitter.com/dDDzKsOF4W
— prime video IN (@PrimeVideoIN) December 6, 2022
- இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'.
- இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஹனு மான்
இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'ஹனு-மான்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

ஹனு மான்
இந்நிலையில் 'ஹனு-மான்' படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் லைக்குகளும் குவிந்து வருகிறது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் 'ஹனு-மான்' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சமீபத்தில் நடிகை பார்வதி நாயர், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.
- இந்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பார்வதி நாயர்
கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி சுபாஷ் சந்திர போஸ் ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடி காரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பார்வதி நாயர்
இந்த நிலையில் தான் பார்வதி நாயர் தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் தருவதாகவும் கொடுத்த புகாரின் பேரில் தற்போது நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுபாஷ் சந்திர போஸ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலம்டைந்தவர் நடிகர் ராணா.
- தனியார் விமான பயணத்தின் போது தனது ‘லக்கேஜ்’ மாயமானதாக ராணா கோபமடைந்து பதிவிட்டுள்ளார்.
நடிகர், நடிகைகள் சிலருக்கு விமான பயணத்தில் அவ்வப்போது சில அசவுகரியங்கள் ஏற்படுவதும், அதை அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துவதும் வழக்கமாக நடக்கிறது. இதில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்து இருக்கிறார். இவர் தனியார் விமானம் ஒன்றில் பயணித்தபோது அவரது பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மாயமாகி விட்டது.

ராணாவின் பதிவு
இதுகுறித்து ராணா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''விமான பயணத்தில் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. விமானத்தில் காணாமல் போன எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜ் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று பதில் சொல்கிறார்கள். இந்த விஷயம் சக பயணிகளுக்கு தெரியும். ஆனால் அதிகாரிகள் தெரியாது என்கின்றனர். இதை விட கேவலம் இருக்குமா?" என்று கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட விமான நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களையும் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்.
- இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'காபி வித் காதல்'.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிப்பில் வெளியான படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

காபி வித் காதல்
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

காபி வித் காதல்
இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், காபி வித் காதல் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னணி நிறுவனமான ஜீ5 ஓடிடி தளத்தில் காபி வித் காதல் திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காபி வித் காதல் படக்குழு
இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சி கூறுகையில், "காபி வித் காதல்" ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். சில சமயங்களில் நமது பெற்றோர்கள் நமது தனித்திறமைகளை உணரத் தவறிய நேரங்கள் உண்டு, ஆனால் நம் உடன்பிறப்புகள் எப்பொழுதும் நம்மைக் கவனித்து, நம்மைச் சரியாக புரிந்து கொள்வார்கள். காபி வித் காதல் என்பது உறவுகளின் கலவையாகும், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் உடன்பிறப்புகளுடனான மோதல்கள் மற்றும் இனிமையான நினைவுகள் அனைத்தையும் அழகாக சொல்லும் கதை இது.
இப்படத்தை காணும் ஒவ்வொருவரும் தங்கள் உடன்பிறப்பை கண்டிப்பாக நினைப்பார்கள். ஜீ5 தளம் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி இந்தக் கதையைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல, இதை விட சிறந்த தளம் இருக்க முடியாது. இதயத்தை கொள்ளை கொள்ளும் அருமையான பொழுதுபோக்குக்கு 'காபி வித் காதல்' காண தயாராகுகங்கள். டிசம்பர் 9 முதல் ஜீ5 தளத்தில் 'காபி வித் காதல்' பார்க்க தயாராகுங்கள் என்றார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
- பணம் வாங்கிகொண்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர் சங்கத்தில் யோகிபாபு மீது தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் புகார் அளித்துள்ளார்.
'தாதா' என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் யோகிபாபு, நிதின் சத்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக காயத்ரி மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கி உள்ளார். தாதா படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்று யோகிபாபு சமீபத்தில் மறுப்பு வெளியிட்டார்.

யோகிபாபு
இதுகுறித்து தாதா படத்தின் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் பட விழாவில் பேசும்போது, ''யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? தாதா படத்தை வாங்காதீர்கள் என்று பலருக்கு போன் செய்து தடுக்கிறார். எனக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக பணம் வாங்கி கொண்டு நடிக்கவும் முன்வரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. எனக்கு படம் நடித்துக் கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.






