ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ஜுனியர் எம்.ஜி.ஆர். புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றது.
ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் பூஜை
ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் பூஜை
Published on

அறிமுக இயக்குனர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ஜுனியர் எம்.ஜி.ஆர். முக்கிய கதாபாத்திரத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் கிரிஷா குரூப், ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் பூஜை

தேர்ட் ஐ கிரியேஷன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் ஜுனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குனர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி, இயக்குனர் தமிழ், பிக்பாஸ் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

புதுமையான க்ரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com