என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை பார்வதி நாயர், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.
- இவரின் புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர்.
நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

பார்வதி நாயர்
இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பார்வதி நாயர்
கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

பார்வதி நாயர்
இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வேலைக்கார வாலிபர் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர்.
- ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.
- இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் 'கிடா'. இப்படத்தில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிடா
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தா மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள 'கிடா' திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.
இத்திரையிடலின் போது மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் நடைபெறவுள்ள 20-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படவிழா டிசம்பர் 15 முதல் டிசம்பர் 22 வரை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் பாலா ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா சமீபத்தில் விலகினார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாகவும் ஆனாலும் 'வணங்கான்' திரைப்படத்தின் பணிகள் தொடரும் என்றும் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வணங்கான்
இதனைத் தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவாது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதர்வா இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு பாலா இயக்கிய 'பரதேசி' திரைப்படத்தில் அதர்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’.
- இந்த படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

உயிர் தமிழுக்கு ஃபர்ஸ்ட்லுக்
வித்தியாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பழனி முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார்.
- அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்
திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பழனி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம் செய்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்ட அவர் அதன்பிறகு போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார்.

யோகி பாபு
இதையடுத்து, அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்போது, நடிகர் யோகிபாபு "கார்த்திகை திருநாளில் முருகனை தரிசனம் செய்து என் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டினேன்" என்று கூறினார்.
கடந்த சில நாட்களாக நடிகர் யோகிபாபு மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் வேறு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் பழனி முருகன் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.
- நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
- இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும்.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

கனெக்ட்
'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கனெக்ட் போஸ்டர்
அதன்படி, 'கனெக்ட்' திரைப்படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
"Fear the Devil. It comes at midnight"#ConnectTrailer screaming from 12 midnight, on December 9 ⌛l
— Rowdy Pictures (@Rowdy_Pictures) December 6, 2022
Subscribe to the official YouTube channel of Rowdy pictures for more updates: https://t.co/xtH6ntqqTP@VigneshShivn #Nayanthara @AnupamPKher @Ashwin_saravana pic.twitter.com/fUX6Tw4ZN5
- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு.
- இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு
சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளால் விரைவில்சிம்புவின் திருமணம் நடைபெறும்" என்று கூறினார்.
- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் 'சர்தார்' திரைப்படம் வெளியானது.
- இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் குவித்தது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

நடிகர் கார்த்தி வழங்கிய வெள்ளி வாட்டர் பாட்டில்
'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் குவித்தது. இந்நிலையில், 'சர்தார்' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ரூ.30,000 மதிப்புள்ள சில்வர் வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- நடிகர் பரத் நடிக்கும் 50-வது படம் ‘லவ்’.
- இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.
பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் 'மிரள்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

லவ்
இவர் தற்போது 50-வது படமாக 'லவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. திரில்லர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லவ்
ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சி 58-வது நாட்களை நெருங்கியுள்ளது.
- இன்று வெளியான மூன்றாவது புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 58-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இந்த வார டாஸ்க்காக வாரம் முழுவதும் கதாபாத்திரங்களாக இருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்து அவர்களிடம் இருந்து சன்மானம் பெறவேண்டும். இதில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் கதிர் டான்ஸில் பட்டையை கிளப்புகிறார். இதனை பார்த்த போட்டியாளர்கள் அவருக்கு ரூ.9000 சன்மானம் வழங்குகின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
- இப்படம் மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

கட்டா குஸ்தி
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சண்ட வீரச்சி' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- நடிகை ஹன்சிகா - சோகைல் கதுரியா திருமணம் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது.
- இவர்களது திருமணத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஹன்சிகா - சோகைல் கதுரியா
இந்நிலையில், நடிகை ஹன்சிகா திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






