என் மலர்
சினிமா செய்திகள்
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துள்ள படம் துணிவு.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து வைரலாகி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. இதில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று உள்ளன. துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' என்று தொடங்கும் பாடல் நாளை (9-ந் தேதி) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அனிருத் பாடி இருந்த இந்த பாடலை ரசிகர்கள் கேட்க ஆர்வமாக இருந்தனர்.

துணிவு - அஜித்
இந்நிலையில் 'சில்லா சில்லா' பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது. சில்லா சில்லா பாடலை பகிரவேண்டாம் என்று படக்குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார்.
- ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை:
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67), திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம்.
பிரபல நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உட்பட பல திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது அவர் சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்றிரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பால தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழு, திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இதில் நடிகர் பரத் பேசியதாவது, இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப் படக்குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். ஆர்பி ஃபிலிம்ஸ் ஆர்பி.பாலா தயாரிப்பாளராக மாறிவிட்டார். மிக நல்ல இயக்குனர். அவருடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. ஆர்.பி.பாலா சாருக்கு நன்றி. பி.ஜி.முத்தையா சார் ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார் அவருக்கு நன்றி.

வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும் அனைவருக்கும் நன்றி என்றார்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஃப் படத்தில் நடித்திருந்தவர் கிருஷ்ணா ஜி ராவ்.
- கிருஷ்ணா ஜி ராவ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் கேஜிஃப். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் பார்வையற்ற வயதானவர் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கிருஷ்ணா ஜி ராவ். கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள அனைவராலும் அறியப்பட்டார்.
நீண்ட வருடங்களாக திரைத்துறையில் துணை நடிகராக வலம் வரும் கிருஷ்ணா ஜி ராவ், சமீபத்தில் தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளியான 'நானோ நாராயணப்பா' என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

கிருஷ்ணா ஜி ராவ்
வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த கிருஷ்ணா ஜி ராவ், திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிருஷ்ணா ஜி ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு கன்னட திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் வருத்தத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.
- இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா
மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

டப்பிங் பணியில் ரஜினி
இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

ரீ-ரிலீஸ் தேதி
இந்நிலையில் 'பாபா' படத்தின் ரீ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது.
- இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியீடு குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி வருகிறது. ரசிகர்கள் இணையத்தில் வாரிசு குறித்த தெலுங்கு ரிலீஸ் பற்றியே அதிகம் விவாதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் கே.ராஜன் பேசியதாவது, இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு அறையில் இருக்கிறார்கள், வயதானவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. வாரிசு படத்துக்கு தெலுங்கில் திரையரங்கம் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுகிறார்கள்.

கே.ராஜன்
தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை. இங்கே லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் இங்கேயா அந்தப் படத்தை எடுத்தார்கள். இங்கே இந்த மாதிரி சின்ன படம் தான் ஓட வேண்டும். நல்ல கதையைச் சொல்லும் இந்தப்படம் ஓட வேண்டும் என்றார். இந்தக்கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பதிலடி கொடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
- தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

வால்டேர் வீரய்யா
இந்நிலையில் 'வால்டேர் வீரய்யா' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சேத்தன் குமார்.
- இவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சேத்தன் குமார், இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்திய கிரிக்கெட் அணியின் 70% பேர் உயர்சாதிகளை சேர்ந்தவர்கள். இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இருப்பதை போல் கிரிக்கெட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்.

சேத்தன் குமார்
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சாதிகளில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் ஆட்ட திறன் சிறப்பாக இருக்கும். தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குழுவிலும் இடஒதுக்கீடு தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடிகர் சேத்தன் குமாரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- தமிழ், மலையாளத்தில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் வைக்கம் விஜயலட்சுமி.
- இவர் தனது கணவர் எப்பவுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டி வந்தார் என்று கூறியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடி வருகிறார். ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ படத்தில் 'கோடையிலும் மழை போல' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

வைக்கம் விஜயலட்சுமி
இமான் இசையில் இவர் பாடிய 'சொப்பன சுந்தரி நான் தானே' என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் இவரை அறிமுகம் செய்து வைத்தது. அபார குரல் ஞானத்தில் எல்லோரையும் வியக்க வைத்தார் விஜயலட்சுமி. ஆனாலும் அவர் பார்வை திறன் குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்தார். 2016-ல் பெற்றோர் இவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் எடுத்தனர்.

வைக்கம் விஜயலட்சுமி
அப்போது கிடைத்த மாப்பிள்ளை பல கட்டுப்பாடுகளை விதித்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் விஜய லட்சுமி. அதன் பிறகு 2018-ல் அனூப் என்ற பல குரல் கலைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

கணவருடன் வைக்கம் விஜயலட்சுமி
இந்த நிலையில் சமீபத்தில் வைக்கம் விஜயலட்சுமி அளித்துள்ள பேட்டியில் தன் முன்னாள் கணவர் குறித்துப் பேசியிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அவர் கூறியதாவது, "எனது கணவர் ஒரு சேடிஸ்ட் என்பது போகப் போகத்தான் எனக்குத் தெரிய வந்தது. அவர் எப்பவுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டி வந்தார். அதையே அவர் முழுநேர பணியாகவும் வைத்திருந்தார்.

வைக்கம் விஜயலட்சுமி
திருமணத்துக்குப் பின் எனது பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதையெல்லாம் விட என்னைப் பாட்டு பாட கூடாது எனக்கூறி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். மிகவும் சித்ரவதை செய்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாடல்கள் தான் எனக்கு உயிர். அவருக்காக என் சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை.

வைக்கம் விஜயலட்சுமி
பொதுவாகப் பல்வலி வந்தால் முதலில் அதைப் பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமானால் அந்த பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதனால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன்" எனக் கண் கலங்கியபடி கூறியுள்ளார்.
- கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட படங்களில் நடித்தவர் புளோரா சைனி.
- தனது முன்னாள் காதலன் தன்னை எப்படி அடித்து பாலியல் துன்புறுத்தினார் என்பது குறித்து புளோரா சைனி மனம் திறந்து பேசினார்.
பிரபல நடிகை புளோரா சைனி, தமிழில் கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்பட தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். புளோரா சைனி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதலனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டது குறித்து மனம் திறந்து பேசினார். "ஆரம்பத்தில் அவர் மிகவும் இனிமையாக இருந்தார். மிகவும் நல்லவர், அவர் ஒரு நல்ல பையன் என்று என் பெற்றோரும் ஏமாற்றப்பட்டனர்.

புளோரா சைனி
ஷ்ரத்தா விஷயத்திலும், அதுதான் நடந்தது. அவர் என்னை முதலில் என் குடும்பத்தில் இருந்து துண்டித்துவிட்டார். நானும் என் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் அவருடன் சென்ற ஒரு வாரத்தில், நான் அவமானப் படுத்தப்பட்டேன், அவன் ஏன் என்னை திடீரென்று அடிக்கிறான் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாள் இரவு, அவர் என்னை அடித்து உதைத்தார். எனது தாடை உடைந்தது.

புளோரா சைனி
அவர் அன்றிரவு உன்னைக் கொன்றுவிடுவேன் என்று என்னை மிரட்டினார். அந்த நொடியில், எனது அம்மாவின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது, அத்தகைய தருணத்தில் நீங்கள் ஓட வேண்டும் ஆடை இருக்கிறதா இல்லையா என்று கூட நினைக்க வேண்டாம். உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்படித்தான் நான் என் வீட்டிற்கு ஓடினேன், நான் திரும்பப் போவதில்லை என்று முடிவு செய்தேன். பின்னர் ஒருவழியாக எனது காதலனுக்கு எதிராக புகார் அளித்தேன் என கூறினார். டெல்லியில் நடந்த அதிர்ச்சியூட்டும் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை போல் தனது வழக்கு இருந்ததாக கூறினார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் சுந்தர் சி.
- இவர் தற்போது கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடித்தும் வருகிறார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் சுந்தர் சி
சமீபத்தில் சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான 'காபி வித் காதல்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி -க்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வழங்கினார். இது தொடர்பான வீடியோவை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
A moment of pride, joy & honour as the better half of #SundarC as he receives his #DoctarateOfLetters from Her Excellency Smt @DrTamilisaiGuv avl. My gratitude & thank you to Shri #ACShanmugam Shri #ACSArun avl for bestowing this honour upon him. #DrMGRUniversity#DrSundarC ❤️ pic.twitter.com/oHbhQ3hKHi
— KhushbuSundar (@khushsundar) December 7, 2022
- யானை தந்தம் வழக்கில் நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
- இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் நடிகர் மோகன்லால் வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்ப பெறுவதாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது.

மோகன்லால்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அரசின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் மோகன்லால் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், யானை தந்தம் வழக்கில் மோகன்லால் சட்டத்தை மீறவில்லை என்றும் அது இறந்த வளர்ப்பு யானையின் தந்தங்கள் என்றும் கேரள அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால்
இதனை கேட்ட கேரள உயர்நீதிமன்றம் ஒரு சாமானியனுக்கு அரசு இப்படி தளர்வு அளிக்குமா? என கேள்வி எழுப்பியதுடன் சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்றும் மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்றும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.






