பாபா படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாபா
பாபா
Published on

கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா
பாபா

பாபா

மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

டப்பிங் பணியில் ரஜினி
டப்பிங் பணியில் ரஜினி

டப்பிங் பணியில் ரஜினி

இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

ரீ-ரிலீஸ் தேதி
ரீ-ரிலீஸ் தேதி

ரீ-ரிலீஸ் தேதி

இந்நிலையில் 'பாபா' படத்தின் ரீ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com